Aalwar cover

Movie: Aalwar (2007)
Music: Srikanth Deva
Lyricists: Vaali
Singers: Unnikrishnan and Senthildas

Added Date: Feb 11, 2022

ஆண்: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு

ஆண்: அடியோனோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கையின் பல்லாண்டு

ஆண்: வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படைப்போர் புக்கும் முழங்கும்
பெண்: ஆஅ…ஆஅ…ஆ…
ஆண்: அப்பஞ்ச சன்னியமும் பல்லாண்டே
பெண்: ஆஅ…ஆஅ…ஆ… ஆஅ…ஆஅ…ஆ…

ஆண்: ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன்தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்

ஆண்: அருள் மாமழையை வார்க்கும் நீல நயணம் அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும்

ஆண்: அவன்தான் ரங்கன் அரங்கன் மறை நூல் ஞான சுரங்கன் மதுசூதன் மணிவண்ணன் திருநாமம் பாட பாட இன்பம்

ஆண்: ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன்தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்.ம்ம்..ம்ம்ம்..

ஆண்: கோவிலில் நாள்தோறும் பூவாரம் சூட்டியே பூஜைகள் செய்கின்றவன்.ன்..

ஆண்: வீட்டினில் அதுபோல தாய் தன்னை போற்றியே சேவைகள் செய்கின்றவன்

ஆண்: அவன்தான் நல்ல மனிதன் அவன் போல் இல்லை புனிதன் பால் போல் வெண்மை இதயம் பரி போல் மென்மை வடிவம் அவன் தாயாரை தாலாட்டி தாயாகிப் போனானே

ஆண்: ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்.ம்ம்ம்…

ஆண்: தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே பாசங்கள் வார்க்கின்றவன்

ஆண்: தாயினும் மேலான அன்பை தான் காட்டியே நேசங்கள் வளர்க்கின்றவன்

ஆண்: இதுதான் நல்ல குடும்பம் இதில்தான் தெய்வம் விளங்கும் வாழும் மூவர் உறவும் வண்ண தமிழின் வடிவம்

ஆண்: இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடாகும்
பெண்: ஆஅ…ஆஅ…ஆ… ஆஅ…ஆஅ…ஆ… ஆஅ…ஆஅ…ஆ…

ஆண்: ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்..ம்ம்ம்..ம்ம்ம்..