படபட படவென இதயம் துடிக்கிது பாடல் வரிகள்

படபட படவென இதயம் துடிக்கிது
பனித்துளி பனித்துளி நெருப்பினை குடிக்கிது
இது என்ன அதிசயம் இவனுக்குள் நடக்குது ஓஹோ ஓஹோ

கண்ணாடி தானாக கல்லாகி நீ நோக
துண்டாகி போனேனே ஹோ
முன்னாடி நீ போக பின்னாடி நான் வேக
திண்டாடி போனேனே ஹோ

உன்னை சும்மாச்சுக்கும் கட்டிக்கிறேன்னு
சொல்லு கட்டிக்கிறேன்னு சொல்லுன்னு மெரட்டுனேன்
ஆனா உண்மையிலியே உன்னைய கட்டிக்கண்ணு தோணுதுல

காதல் வந்து என் கண்ணை கட்டிக்கூட்டி போக
கால்கள் அது ரெக்கை கட்டி விண்ணில் போக
கைகள் ரெண்டும் காற்றில் எங்கும் உன்னை தேட
பெண்ணே உந்தன் பின்னே எந்தன் நெஞ்சே…

Movie: Kalavani
Lyrics: Na. Muthu Kumar
Music: S. S. Kumaran