Oyyara Mayil Mel Song Lyrics

Movie: Pottu Amman (2000)
Music: S. D. Shanthakumar
Lyricists: Piraisoodan
Singers: Swarnalatha, K. S. Chithra and Bombay Jayashri

Added Date: Feb 11, 2022

பெண்: ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா.

பெண்: ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா

பெண்: கூவிய மயிலேறும் குருபரா வருக தாவியே தகரேறும் ஷண்முகா வருக கூரிய வேலேந்தும் குகனே வருக சேவலின் கொடியேந்தும் செவ்வேல் வருக ரத்னகிரி வாழ்கின்ற தெய்வசிகாமணியே ஷண்முக துய்ய மணி தணிகைவேல் மணியே

பெண்: காலில் தண்டை கலீர் கலீர் என சேலில் சதங்கை கணீர் கணீர் என மகர குண்டலம் பளீர் பளீர் என மலர் படுப்பணை தகதகவென

பெண்: பத்ரகாளி பணிவிடை செய்ய சக்திகளெல்லாம் தாண்டவம் ஆட அஷ்ட பைரவர் ஆனந்தமாட இஷ்ட சூலிகள் வாழ்த்துக்கள் பாட அஷ்டலட்சுமி அம்பிகை பார்வதி கந்தா கடம்பா என்றுனை போற்ற

பெண்: சசசசசசசச ஓம் க்லீம் ரரரரரரரர ரீம் ரீம் வவவவவவவவ ஆஹோ னனனனனனனன வா வா வா பபபபபபபப….வவவவவவவவ ஆஹோ னனனினும் னனனினும் நாட்டிய அர்ச்சனை

பெண்: கஹ்ஹ கஹகஹ கந்தனே வருக இக்ஹ இஹஹா ஈசனே வருக தக்க தகதக சற்குரு வருக பக்க பஹ பஹ பறந்தே வருக

பெண்: சக்தியே படைத்த சிவந்த நாவை கட்டுகள் கட்டி மடக்குவதா
குழு: ஓம் ஓம் ஓம்
பெண்: சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேல்தான் இக்கட்டை அறுக்க மறுக்கிறதா
குழு: ஓம் ஓம் ஓம்

பெண்: கீழ்த்திசைக் கட்டை கிருபாகர காக்க மேல்திசைக் கட்டை மயிலோன் காக்க தென்திசைக் கட்டை தண்டாயுதம் காக்க வடதிசை கட்டை வடபழனியும் காக்க

குழு: ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

பெண்: முகத்தின் அழகினை முத்துவேல் காக்க கழுத்து மார்பினை நல்வேல் காக்க தோள்கள் இரண்டினை தூயவேல் காக்க வயிறு முதுகினை வெற்றிவேல் காக்க

பெண்: சிற்றிடை முழுதும் செவ்வேல் காக்க தொடைகள் இரண்டும் திருவேல் காக்க முன் கை பின் கை முருகவேல் காக்க உச்சிப் பாதத்தை கதிர்வேல் காக்க வல்வினை யாவும் வஜ்ரவேல் காக்க

குழு: ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

பெண்: வேலாயுதம் காக்க சூலாயுதம் காக்க சக்ராயுதம் காக்க சங்கும் காக்க வில்லும் அம்பும் வினைகளை காக்க சதியை தேடி சந்ததி அழித்து சக்ராயுதம் காக்க சடுதியில் காக்க தடையின்றி காக்க காக்க காக்க..