Lyricist Kabilan Vairamuthu

ஆக்சிஜன் தந்தாயே பாடல் வரிகள்

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே

ஓடும் நதியில் இலையைப் போலே
நாட்கள் நகர்கிறதே இலையின் மீது
நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே

கலாபமே எனைக் கீறினாய் மழை மேகமே பிழையாகினாய்
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே
போனாய் எதனாலே போனாய் எதனாலே எதனாலே
ஓஹோ ஹ்ம்ம்

உலா உலா கல்லூரி மண்ணிலா
உன் தீண்டல் ஒவ்வொன்றும்
எனை கொய்யும் தென்றலா

முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்
சிறு மோகம் வந்ததாய் சேலை சிண்ட்ரெல்லா

வெட்டவெளி வானம் எங்கும் வட்டமுகம் கண்டேன் கண்டேன்
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் யுத்தம் இடும் காதல் கொண்டேன்

காலம் அது தீர்ந்தால் கூட காதல் அது வாழும் என்றேன்
பாவை நீ பிரியும் போது
பாதியில் கனவை கொன்றேன்

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே

தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
நிழலோடும் உரசாத தன்மானம் எனது

எடை இல்லா பொருளல்ல அடி காதல் மனது
அகலாத ஒரு நினைவு அது மலையின் அளவு

ஆளற்ற அறையில் கூட அநியாய தூரம் தொல்லை
உன் இதயம் அறியாதழகே
என் இதயம் எழுதும் சொல்லை

மௌனமாய் தூரம் நின்றால் மடியிலே பாரம் இல்லை
மீண்டும் ஒரு காதல்செய்ய கண்களில் ஈரம் இல்லை

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே

ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே

கலாபமே எனைக் கீறினாய் மழை மேகமே பிழையாகினாய்
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்…

Movie: Kavan
Lyrics: Kabilan Vairamuthu
Music: Hiphop Tamizha