Anbu Kattalai cover

Movie: Anbu Kattalai (1989)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ.ஆஅ..அ… ஆஅ..ஆஅ…ஹா…ஆஅ…ஆஅ…ஆஅ.. ஹா..ஆ…ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆஅ.ஆஅ..

ஆண்: ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ எங்கே சென்றாலும் அன்பே மாறாது நெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது

ஆண்: ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ

ஆண்: பாரதத்தின் பிள்ளை கர்ணன் தாயைக் கண்டபோதிலும் பேரை சொல்ல தந்தை தன்னை அறியவில்லை அன்றுதான்

ஆண்: குந்திதேவி தான் அறிந்தாள் கர்ணன் தந்தை தன்னையே இந்த பிள்ளை தந்தை தன்னை இன்றும் அறியவில்லையே

ஆண்: அன்றும் என்ன இன்றும் என்ன பாரதம் என்றும் உண்டு ஏற்றால் என்ன மறுத்தால் என்ன இன்பம் துன்பம் உண்டு நீயேதான் வாடாதே….வாடாதே..ஏ.

ஆண்: எங்கே சென்றாலும் அன்பே மாறாது ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ எங்கே சென்றாலும் அன்பே மாறாது நெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது

ஆண்: பிறவி பிச்சை போட்ட தந்தை பிச்சை வாங்கும் கோலமே போட்டப் பிச்சை மீண்டும் தந்தை கொண்டதென்ன மாயமே தலைவன் உண்டு தாலி உண்டு விதவை இந்த பைங்கிளி பொட்டிழந்து பூவிழந்த நித்திய சுமங்கலி

ஆண்: தீயில் வெந்தும் தங்கம் என்றும் மாற்று குறையாதிங்கே துன்பத்தாலே நெஞ்சம் வெந்தும் அன்பும் மாறாதிங்கே நீயேதான் வாடாதே….வாடாதே.ஏ.

ஆண்: எங்கே சென்றாலும் அன்பே மாறாது ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ உறவாடும் நெஞ்சங்கள் எங்கெங்கோ எங்கே சென்றாலும் அன்பே மாறாது நெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்