Anni cover

Movie: Anni (1985)
Music: Gangai Amaran
Lyricists: Vaali
Singers: Vani Jayaram and K. J. Jesudass

Added Date: Feb 11, 2022

குழு: ………..

ஆண்: ஓர் நாள் பழக்கமல்ல..
பெண்: நான் நீ இருவரல்ல
ஆண்: காதல் பூத்தது கனியாய் கனிந்தது
பெண்: காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது
ஆண்: வா
பெண்: வா இருவர்: வா வா வா வா வா..

ஆண்: ஓர் நாள் பழக்கமல்ல..
பெண்: நான் நீ இருவரல்ல

ஆண்: கோடாலி முடிச்சு போட்டு கொண்டைத்தான் மடிச்சு போட்டு வாடாத மல்லியப்பூவு சிரிக்கிறா கண்ணுல வண்ணாத்தி பூச்சியாட்டம் பறக்குறா

குழு: ………

ஆண்: ஏரோட்ட மஞ்சக்காணி உண்டு
பெண்: நீர் பாய்ச்ச ஆழக் கேணி உண்டு
ஆண்: வா புள்ள வயசுப் புள்ள ஆச விடுமோ
பெண்: ஏ மச்சான் இளைய மச்சான் ஏக்கம் வருமோ
ஆண்: பூவாட..பாவாட… பூவாட பாவாட காற்றில் வீச

பெண்: ஓர் நாள் பழக்கமல்ல..
ஆண்: நான் நீ இருவரல்ல

ஆண்: தை மாசம் மால போடப் போறேன்
பெண்: நீ போட்டா நானும் கூட வாரேன்
ஆண்: பால் வச்சு பழமும் வச்சு பாய்தான் இடணும்
பெண்: ஹான் நான் வந்து நிக்கும் போது நீதான் தொடணும்
ஆண்: ஆனந்தம்.ஆரம்பம்..ஆனந்தம் ஆரம்பம் ஆகும் நேரம்

பெண்: ஓர் நாள் பழக்கமல்ல..
ஆண்: நான் நீ இருவரல்ல
பெண்: காதல் பூத்தது கனியாய் கனிந்தது
ஆண்: காலம் வாழ்த்துது கை மேல் விழுந்தது
பெண்: வா
ஆண்: வா இருவர்: வா வா வா வா வா..

பெண்: ஓர் நாள் பழக்கமல்ல..
ஆண்: நான் நீ இருவரல்ல…