Arasilangkumari cover

Movie: Arasilangkumari (1961)
Music: G. Ramanathan
Lyricists: R. Pazhanichami
Singers: Soolamagalam Rajalakshmi, T. M. Soundararajan and

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜி. ராமநாதன்

பெண்: ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்சேர்ந்து வருகுறார் வழியிலே யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார் என்ன சேதியோ தெரியலே

பெண்: ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்சேர்ந்து வருகுறார் வழியிலே யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார் என்ன சேதியோ தெரியலே

பெண்: வெட்கத்தாலே பெண்ணின் முகத்தில் இட்ட மஞ்சளும் சிவக்குது வெட்கத்தாலே பெண்ணின் முகத்தில் இட்ட மஞ்சளும் சிவக்குது

பெண்: பட்டுக் கைவிரல் பட்டதுமே அவள் பளிங்கு விழிகள் ஏன் தவிக்குது பட்டுக் கைவிரல் பட்டதுமே அவள் பளிங்கு விழிகள் ஏன் தவிக்குது

பெண்: ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்சேர்ந்து வருகுறார் வழியிலே யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார் என்ன சேதியோ தெரியலே

பெண்: { விறகு வெட்டியிடம் வீணை கிடைத்தால் குருடா் கையிலே கவிதை கொடுத்தால் இருவரும் தவிப்பது அதிசயமா அதிசயமா } (2)

பெண்: இது இவருக்கும் பொருந்திடும் உவமை அம்மா இது இவருக்கும் பொருந்திடும் உவமை அம்மா

ஆண்: திறமையில்லாமல் ஓட்டுவதாலே திண்டாடும் வண்டி தடம் புரளும் திண்டாடும் வண்டி தடம் புரளும்

ஆண்: திறமும் பண் பாடும் இல்லாத நாடு தாழ்வு உயர்விலே இடறி விழும் திறமும் பண் பாடும் இல்லாத நாடு தாழ்வு உயர்விலே இடறி விழும்

பெண்: உயர்வு தாழ்வுகள் நம்மிலே இல்லை உள்ளமும் ஒன்றாய் ஆனது உயர்வு தாழ்வுகள் நம்மிலே இல்லை உள்ளமும் ஒன்றாய் ஆனது

பெண்: உருவினில் தானே பேதம் தோணுது நிலையினில் சமத்துவம் மேவுது உருவினில் தானே பேதம் தோணுது நிலையினில் சமத்துவம் மேவுது

ஆண்: ஆள்பவள் நீயே அடிமையும் நானே அணு அளவும் இல்லை சமத்துவம் நம்மில் அணு அளவும் இல்லை சமத்துவம்

ஆண்: சரி நிகராக யாவரும் வாழ்வில் இருப்பது தான் அதன் தத்துவம் சரி நிகராக யாவரும் வாழ்வில் இருப்பது தான் அதன் தத்துவம்

பெண்: அந்த நாள் என்று வந்திடும்
ஆண்: மக்கள் சிந்தித்தாலே பிறந்திடும்
பெண்: அந்த நாள் என்று வந்திடும்
ஆண்: மக்கள் சிந்தித்தாலே பிறந்திடும்

ஆண்: கூட்டுறவாக நாமிருந்தாலே நாட்டின் கவலைகள் அகலுமே ஏட்டில் இல்லாத எல்லா புதுமையும் என்றும் வாழ்விலே திகழுமே

ஆண் &
பெண்: கூட்டுறவாக நாமிருந்தாலே நாட்டின் கவலைகள் அகலுமே ஏட்டில் இல்லாத எல்லா புதுமையும் என்றும் வாழ்விலே திகழுமே

பெண்: ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்சேர்ந்து வருகுறார் வழியிலே யாரும் அறியாமல் கண்ணால் பேசுறார் என்ன சேதியோ தெரியலே