Deiva Vaakku cover

Movie: Deiva Vaakku (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Jayachandran and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ

ஆண்: ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ

ஆண்: வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஓ…ஓஓ வண்ணக்கிளியே சொல்லு கிளியே

பெண்: ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே

பெண்: வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஓ..ஓஓ வண்ணக்கிளியே சொல்லு கிளியே

ஆண்: தெய்வம் வரும் மனித உருவிலே படித்ததுண்டு ஏட்டிலே தெய்வம் என்று தெரிந்த போதிலே பூட்டலாமோ வீட்டிலே

ஆண்: பூஜை செய்யும் தேவி உன்மேல் ஆசை வைத்தால் பாவம் நானும் உன்னை தாரம் என்று ஏற்றுக் கொண்டால் துரோகம்

ஆண்: ஜீவன் உள்ள வான் நிலாவை நானும் சேரக் கூடுமோ பாவம் இந்த பாவம் என்று காலம் என்னை தூற்றுமோ…

பெண்: ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே

பெண்: வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஓ ஓஓ வண்ணக்கிளியே சொல்லு கிளியே

பெண்: தெய்வம் கண நேரம் என் மேல் வந்து பேசி போகுது வந்து பேசி போவதால் நான் தெய்வம் ஆக கூடுமோ

பெண்: ஊரில் உள்ள பேருக்கெல்லாம் வாக்கு சொன்ன பாவை உன்னிடத்தில் கேட்டு நின்றாள் வார்த்தை ஒன்று தேவை

பெண்: என்னை தெய்வம் என்றால் எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான் தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஒன்றை நீ கொடு..

குழு: ஆஆஆ..ஆஆ..ஆஆஆ. ஆ ஆஆஆ..ஆஆ..ஆஆஆ. ஆ ஆஆஆ..ஆஆ..ஆஆஆ. ஆ