Ondrupaduvom Ondrupaduvom Song Lyrics

Movie: Yer Munai (1992)
Music: L. Vaithiya Nathan
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmaniyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒன்றுபடுவோம்….ம்ம்… ஒன்றுபடுவோம்..ம்ம்…

ஆண்
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே.. பெண்
குழு: தானன்ன தானானன்ன தானன்ன தானானன்ன..

ஆண்: ஒன்றுபடுவோம்..ஒன்றுபடுவோம்.. நமது கனவுகள் பலிக்கும் நமது கனவுகள் பலிக்கும் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனை….இங்கே ஜெயிக்கும்…ம்ம்ம்ம்..

குழு: ஒன்றுபடுவோம்.ஒன்றுபடுவோம்.. நமது கனவுகள் பலிக்கும் நமது கனவுகள் பலிக்கும் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனை…இங்கே ஜெயிக்கும்..ம்ம்.. உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனை…இங்கே ஜெயிக்கும்..ம்ம்.. தானன்ன தானானன்ன தானன்ன தானானன்ன

ஆண்: விதைப்பதெங்கள் வாழ்க்கை பொறுப்பு அதை விளைய வைப்பதில் ஆயிரம் தவிப்பு விளைந்த பொருளுக்கு விலையேயில்லை இதுதான் இன்றைய நடப்பு

குழு: விதைப்பதெங்கள் வாழ்க்கை பொறுப்பு அதை விளைய வைப்பதில் ஆயிரம் தவிப்பு விளைந்த பொருளுக்கு விலையேயில்லை இதுதான் இன்றைய நடப்பு

ஆண்: உழைத்த பிறகும் நிரம்பவில்லையே உழவன் வீட்டு உழக்கு
குழு: உழைத்த பிறகும் நிரம்பவில்லையே உழவன் வீட்டு உழக்கு

ஆண்: சகதியில் வாழ்ந்தது போதும் அட ஜப்தி கடன்கள் போதும்
குழு: சகதியில் வாழ்ந்தது போதும் அட ஜப்தி கடன்கள் போதும்

ஆண்: உழைப்பவன் இங்கே உலகை ஆள்வான் இதுவே உலகின் வேதம்..ம்ம்ம்.
குழு: உழைப்பவன் இங்கே உலகை ஆள்வான் இதுவே உலகின் வேதம்..ம்ம்ம்.

குழு: ஒன்றுபடுவோம்..ஒன்றுபடுவோம்.. நமது கனவுகள் பலிக்கும் நமது கனவுகள் பலிக்கும் உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனை…இங்கே ஜெயிக்கும்…ம்ம்.. உழவன் நாளை உலகை ஆள்வான் ஏர்முனை…இங்கே ஜெயிக்கும்…ம்ம்..

குழு: ………

ஆண்: கட்டியுள்ளது கந்தைதானே அது ஒட்டியுள்ளதும் விந்தைதானே இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை மானுடமா இது மானுடமா…ஆ…ஆ…

குழு: கட்டியுள்ளது கந்தைதானே அது ஒட்டியுள்ளதும் விந்தைதானே இதை தட்டிக் கேட்கும் தைரியம் இல்லை மானுடமா இது மானுடமா..

ஆண்: கலப்பை போலே தேய்ந்த உழவனே அழுதால் நன்மை வருமா..ஆ. கலப்பை போலே தேய்ந்த உழவனே அழுதால் நன்மை வருமா..

ஆண்: என்ன உழுதவன் நிலைமை அவன் இறகை விற்கும் பறவை
குழு: என்ன உழுதவன் நிலைமை அவன் இறகை விற்கும் பறவை

ஆண்: இனி புண்ணியமென்ன பாவமென்ன.. புரட்சி செய்வதே கடமை

குழு: இனி புண்ணியமென்ன பாவமென்ன.. புரட்சி செய்வதே கடமை
ஆண்: ஹேய்
குழு: இனி புண்ணியமென்ன பாவமென்ன

ஆண் மற்றும்
குழு: புரட்சி செய்வதே கடமை புரட்சி செய்வதே கடமை