Lyricist Yugabharathi

ஓலை ஓலை குடிசையில பாடல் வரிகள்

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

ஓலை ஓலை குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி 
உன்ன நான் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி

ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு 
சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு

வா சீக்கிரம் பூவோடத்தான் நா இப்பவே உன் கூட தான் ஆஆ
வா சீக்கிரம் பூவோடத்தான் நா இப்பவே உன் கூட தான் ஆஆ 

வாசலில கோலமிட ஆசப்பட வேணாமே 
வாசலே இல்லா வீட்டில் பூசணிப் பூ நீதானே

வைரத்துல தோடு செஞ்சு போட்டுக்கொள்ள வேணாமே 
வைரமா நீயும் சேர நகையும் நட்டும் பொய்தானே

வேர்வையில நூலெடுத்து சேலை நெஞ்சு நா தருவேன்
வெக்கப்பட்டு நீ சிரிச்சா கட்டிக்குவேன்

கூடி கலைஞ்ச பிறகும் என் பாசம் ஊறுதே
ஏறு வெயிலப் போல சந்தோஷம் கூடுதே

ஓலை ஓலை குடிசையில உன்ன நா வச்சிக்குவேன்

மாசம் சில போனதுமே மாணிக்கமா ரெட்ட புள்ள
ஒன்னா நீ பெத்துத் தந்தா மருத்துவச்சி பில்லு மிச்சம்

பெத்தெடுத்த பிள்ளைகள ரத்தினம் போல் ஆக்கனுமே
இங்கிலீசும் படிக்க வச்சு ஏரோப் பிளேனில் ஏத்தனுமே

துணையா சேந்திருந்தா நள்ளிரவு வெள்ளிவரும்
தும்மலிடும் சத்தத்துக்கே சாமிவரும்

வாழ வேணும் நாம மழைக்காத்து பூமியா
ஆசை தீர வாழ்ந்தா மறு சென்மம் தேவையா

ஓலை ஓலை குடிசையில ஒண்ட வந்த சீமாட்டி 
உன்ன நான் வச்சிக்குவேன் உசுருக்குள்ள தாலாட்டி

ஆறே காஞ்ச போதும் அன்புல நீ நீராடு 
சோறே இல்லனாலும் சொந்தம் இருக்கும் உன்னோடு

வா சீக்கிரம் பூவோடத்தான் நா இப்பவே உன் கூட தான் ஆஆ
வா சீக்கிரம் பூவோடத்தான் நா இப்பவே உன் கூட தான் ஆஆ…

Movie: Joker 
Lyrics: Yugabharathi
Music: Sean Roldan

Leave a Reply