Annai cover

Movie: Annai (1962)
Music: R. Sudharsanam
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ பக் பக் பக்… பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா…

பெண்: ஓ பக் பக் பக்… பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ..ஆ..ஆ..

பெண்: கூட்டுக்குள்ளே சில காலம் ஒன்று கூடி கிடந்தது போதும் கூட்டுக்குள்ளே சில காலம் ஒன்று கூடி கிடந்தது போதும்

பெண்: கூட்டுக்கு மேல் ஒரு வானம் உன்னை கூவி அழைக்கிது வாராய் கூட்டுக்கு மேல் ஒரு வானம் உன்னை கூவி அழைக்கிது வாராய்

பெண்: கண்ணுக்கு கண்ணாய் ஒண்ணுக்குள் ஒண்ணாய் கலந்து நின்றிட வாராய்

பெண்: ஓ பக் பக் பக்… பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா…

பெண்: ஓ பக் பக் பக்… பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ..ஆ..ஆ..

பெண்: ஆயிரம் வார்த்தைகள் பேசும் எங்கள் மானிடர் செய்வது மோசம் ஆயிரம் வார்த்தைகள் பேசும் எங்கள் மானிடர் செய்வது மோசம்

பெண்: பேசும் ஒரு மொழியாலே உன்னை பேதை அழைப்பது பாசம் பேசும் ஒரு மொழியாலே உன்னை பேதை அழைப்பது பாசம்

பெண்: காற்றில் எழுந்து கட்டி அணைத்து கலந்து செல்வோம் வா

பெண்: ஓ பக் பக் பக்… பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா…

பெண்: ஓ பக் பக் பக்… பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ..ஆ..ஆ..

பெண்: காவல் கடந்திட வேண்டும் நெஞ்சில் காதல் நிறைந்திட வேண்டும் காவல் கடந்திட வேண்டும் நெஞ்சில் காதல் நிறைந்திட வேண்டும்

பெண்: தாமரை மொட்டுக்கள் போலே தலை சாய்ந்து கிடந்திட வேண்டும் தாமரை மொட்டுக்கள் போலே தலை சாய்ந்து கிடந்திட வேண்டும்

பெண்: காலத்தை வென்று ஆனந்தம் கண்டு கனிந்து செல்வோம் வா