Bhadrakali cover

Movie: Bhadrakali (1976)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: உன் பேர் சொல்லும் பெண் ஜென்மம் பித்தென்றும் பேய் என்றும் ஊர் சொல்லும் காரணத்தை யார் சொல்லக் கூடுமம்மா..

ஆண்: ஓடுகின்றாள் உருகுகின்றாள் எதையோ தேடுகின்றாள் எதற்கோ வாடுகின்றாள் பித்தாய் ஆடுகின்றாள்

ஆண்: ஓடுகின்றாள் உருகுகின்றாள் எதையோ தேடுகின்றாள் எதற்கோ வாடுகின்றாள் பித்தாய் ஆடுகின்றாள் ஓடுகின்றாள்

ஆண்: தட்சணனின் மகளாக தரணியில் பிறந்தாலும் ரட்சகன் நினைவாக துடித்தாய் அம்மா

ஆண்: தட்சணனின் மகளாக தரணியில் பிறந்தாலும் ரட்சகன் நினைவாக துடித்தாய் அம்மா

பெண்: தாய் வழி சேய் என்னும் தத்துவம் மெய்யாக நீ இவள் வாழ்விலும் நடித்தாயம்மா பித்தாய் ஆடுகின்றாள்

ஆண்: ஓடுகின்றாள் உருகுகின்றாள் எதையோ தேடுகின்றாள்

ஆண்: கன்னி என்றானாலும் பிள்ளையைப் போல் அன்று தன் நிழல்தான் கண்டு பயந்திருந்தாள்

ஆண்: கன்னி என்றானாலும் பிள்ளையைப் போல் அன்று தன் நிழல் தான் கண்டு பயந்திருந்தாள்

ஆண்: யட்சினி இனம் போலே இன்றவள் இடுகாட்டில் அச்சமே இல்லாமல் உலவுகின்றாள் பித்தாய் ஆடுகின்றாள்…

ஆண்: கட்டில் உலாவி தொட்டில் குலாவி காதல் கொஞ்சிடும் பெண்மையே

ஆண்: பட்டு நூலிலும் வண்ணப்பூவிலும் தொட்டுப் பார்க்கையில் மென்மையே

ஆண்: அன்பு மேடையில் இன்ப நாடகம் ஆடி நிற்பவள் தன்மையே பண்பு கெட்டவர் பார்வை பட்டதும் பத்ரகாளிதான் உண்மையே

ஆண்: பூங்காற்றின் குணம் மாறி புயலாகுவாள் புனலாக நின்ற மகள் அனலாகுவாள் மோகத்தை பொய்யாக்கி யோகத்தில் நிற்பாள் முக்கண்ணும் தீச் சொரிய திக்கெட்டும் செல்வாள்

ஆண்: ஓம் பத்ரகாளி ஓம் ருத்ரகாளி காயத்ரியாய் மாரி ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி ஓம் பத்ரகாளி..