Asai Magan cover

Movie: Asai Magan (1953)
Music: V. Dakshinamurthy
Lyricists: Kuyilan
Singers: P. Leela and A. M. Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்

பெண்: ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே… ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்

ஆண்: அலையோடு ஆழி சேர்ந்தே ஆனந்தமாவதே போல் அலையோடு ஆழி சேர்ந்தே ஆனந்தமாவதே போல்

பெண்: நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பங் காணுவோமே நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பங் காணுவோமே

ஆண்: உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் யுகமே வினாடியாகும்
பெண்: கவலை பறந்து போகும் காலம் பொன்னானதாகும்

இருவர்: குறையே இல்லாது இன்பம் காண்போம் வாழ்வே குதூகலந்தான் வாழ்வே குதூகலந்தான்..

இருவர்: ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே… ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்

பெண்: மாங்குயில் பாடும் மயில் ஆடும் இளமான்கள் ஓடும்
ஆண்: மாமலை ஓரம் இந்த நேரம் வெகு வேகம் செல்வோம்

இருவர்: நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ குறையே இல்லாது இன்பங் காண்போம் வாழ்வே குதூகலந்தான் வாழ்வே குதூகலந்தான்…

இருவர்: ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே… ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்