Lyricist Vairamuthu

நூறாண்டுக்கு ஒரு முறை பாடல் வரிகள்

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து 
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா 
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா

கண்ணாளனே கண்ணாளனே 
உன் கண்ணிலே என்னை கண்டேன்

கண் மூடினாள் கண் மூடினாள் 
அந்நேரமும் உன்னை கண்டேன்

ஒரு விரல் என்னை தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா

மறு விரல் வந்து தொடுகையில் 
விட்டு விலகுதல் அழகா

உயிர் கொண்டு வாழும் நாள் வரை 
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா…

இதே சுகம் இதே சுகம் ம்ம்ம் எந்நாளுமே 
கண்டால் என்ன
இந்நேரமே இந்நேரமே என் ஜீவனும் போனால் என்ன

முத்தத்திலே பலவகை உண்டு 
இன்று சொல்லட்டுமா கணக்கு

இப்படியே என்னை கட்டி கொள்ளு
 மெல்ல விடியட்டும் கிழக்கு

அச்சம் பட வேண்டாம் பெண்மையே 
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா 
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா

இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து
வாழவா …… ஆஆ

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா…

Movie: Thaayin Manikodi
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar

Leave a Reply