Movie: Kootu Puzhukkal (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and M. S. Vishwanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: …………..

ஆண்: நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா

ஆண்: இள மாலை நேரம் வந்தாய் விழி ஓரம் ஏதோ சொன்னாய் இள மாலை நேரம் வந்தாய் விழி ஓரம் ஏதோ சொன்னாய் எதையோ நினைத்தாய் சிரித்தாய் ஓடினாய்…

ஆண்: நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா

ஆண்: ……………

ஆண்: {மண்ணிலே வீடு கட்டி ஆட வந்தாய் நேற்று நெஞ்சிலே கூடு கட்டி வாழ வந்தாய் இன்று..} (2) அந்த மலரும் நினைவு தோன்றும் அதில் உலகம் மறந்து போகும் அந்த உறவு தொடர வேண்டும் இன்ப கனவு பலிக்க வேண்டும்…

ஆண்: நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா

ஆண்: {ஆஅ..மின்னலோ சேலை கட்டி… வீதி எங்கும் போகும் அம்மம்மா பார்த்திருந்தால் கண்கள் பட்டு போகும்} (2) இது பருவம் அளித்த சீரோ.. உன்னை படைத்த கலைஞன் யாரோ.. அடி இரவில் மலரும் பூவே.. எந்தன் இளமை பருகும் தேனே…

ஆண்: நித்தம் நித்தம் என் கண்ணோடு இன்ப கனா நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை சிந்தும் நிலா இள மாலை நேரம் வந்தாய் விழி ஓரம் ஏதோ சொன்னாய் எதையோ இணைத்தாய். சிரித்தாய் ஓடினாய்…