Movie: Anandha Kanneer (1986)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Added Date: Feb 11, 2022
பெண்: நினைத்தால் நீ வர வேண்டும் நினைவே ஆசையை தூண்டும் உனக்காக நானே ஏங்கினேன் ஓ.
பெண்: பால் வைத்த கிண்ணம் கை பட்டுப் பட்டு மின்னும் இனி போகப் போக பார்க்கலாம் மன்னன் கை வண்ணம்
ஆண்: பால் வைத்த கிண்ணம் கை பட்டுப் பட்டு மின்னும் இனி போகப் போக பார்க்கலாம் மன்னன் கை வண்ணம்
பெண்: மாலை மயங்கிய பொழுதினில் சோலை மரங்களின் நிழல்களில் கிளிக் கூட்டம் போலே கலந்தால் என்ன
ஆண்: தோகை மணி இதழ் திறந்தது தாழை மடல் என விரிந்தது எனக்காகத் தேனை கொடுத்தால் என்ன
பெண்: என் பூ மேனி உன் கையில் போராடுமோ என் பூ மேனி உன் கையில் போராடுமோ
ஆண்: பால் வைத்த கிண்ணம் கை பட்டுப் பட்டு மின்னும்
பெண்: இனி போகப் போக பார்க்கலாம் மன்னன் கை வண்ணம்
பெண்: ஆஹா ஹா.
ஆண்: லலல லலலா லலல லலலா
பெண்: ஓஹோ ஹோ.
ஆண்: லலல லலலா லலல லலலா
பெண்: ராராரா ராராரா ரா.
ஆண்: லாலால லாலால ராரார ராரா ரரா.
ஆண்: வானம் கடலுடன் கலக்குது பாயும் அலைகளும் குதிக்குது அடங்காத ஆசை உண்டானதோ
பெண்: நாணம் கரைகளில் நடமிட காற்றும் சுரங்களை படித்திட கேட்டாயோ காதல் சங்கீதமோ
ஆண்: நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ நம் சந்தோஷம் தீராத சல்லாபமோ
பெண்: பால் வைத்த கிண்ணம் கை பட்டுப் பட்டு மின்னும்
ஆண்: இனி போகப் போக பார்க்கலாம் மன்னன் கை வண்ணம்
இருவர்: லா லால லாலா லல லாலா லாலா லாலா லல லால லால லால லா லாலா லாலா லா.