Neethane Maharani Song Lyrics

Movie: Neethikku Thandanai (1987)
Music: M. S. Viswanathan
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Shoba Chandrasekhar and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா

பெண்: நீதானே மகராணி நிறமென்ன மருதாணி..

பெண்: எழுந்து விரிந்து சிவந்த கொழுந்து நீ நீ நீ இருந்து மகிழ்ந்து விருந்து அருந்து நீ நீ நீ வாழ்த்தினான் மந்திரி வாழ வா சுந்தரி எங்கள் ஊர் மந்திரி ராகவன் மாதிரி

பெண்: அன்போடு பண்போடு கண்ணான கற்போடு வாழ்கின்ற தென்னாடு எந்நாளும் பொன்னாடு பார் பார் பார்

பெண்: நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா

பெண்: ஆஅ..ஆ…ஆ.பருகாத பழச்சாறு உதட்டில் இருந்து பொழிந்து வழிந்து வந்ததே.. இமைக்காத விழிக் கோலம் நிலவை பிழிந்து வெளிச்சம் எடுத்து தந்ததே..

பெண்: மதுப் பானை அதை தாங்கி மங்கை வந்தாளே போதை வந்ததே உன் காலடி அது பூவடி நடக்க நடக்க நிலமும் கூட சிவந்து போனதே

பெண்: நாடு விட்டு நாடு வந்த நாகரீக பெண்ணே உன் கூந்தல் மட்டும் ஏலம் விட்டால் நூறு கோடி பொன்னே

பெண்: நீதானே மகராணி நிறமென்ன மருதாணி…ஈ..

பெண்: மயக்கும் சரக்கு உனக்கு இருக்கு வா வா வா உன் புருவ சுழிப்பில் பருவம் செழிக்க வா வா வா

பெண்: காவிய ராணியே கண்களே உன் பலம் பாவை உன் கோட்டையில் பார்வையே சம்பளம் நீ தண்ணீரைத் தொட்டாலும் பன்னீரின் வாசங்கள் உண்டாகும் உண்டாகும் முள் கூட செண்டாகும் வா வா வா

பெண்: நீதானே மகராணி நிறமென்ன மருதாணி மேல் நாட்டில் யுவராணி கீழ் நாட்டில் கலைவாணி உன் பட்டாடை தொட்டாட பட்டத்து ராசாக்கள் கொட்டாவி விட்டாலும் கிட்டாது கிட்டாது வா வா வா