Bommai cover

Movie: Bommai (1964)
Music: S. Balachander
Lyricists: V. Lakshmanan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம் நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீதான் எந்தன் உலகம்..ம்ம்ம்…

பெண்: நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம்

பெண்: வாவென்றேன் உன்னை வந்தாய் என் கண்ணே தாயென்ற உயர்வை தந்தாய் என் கண்ணே

பெண்: வாவென்றேன் உன்னை வந்தாய் என் கண்ணே தாயென்ற உயர்வை தந்தாய் என் கண்ணே

ஆண்: கண்ணுக்குள் மணியாய்க் கலந்தே நீ வாழ்க மண்ணுக்கு புகழாய் மகனே நீ வாழ்க

பெண்: நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம்

பெண்: தோட்டத்துக் கொடிக்கு பூவால் சிறப்பு வாழும் வீட்டுக்கு ஏற்றும் விளக்கால் சிறப்பு

பெண்: தோட்டத்துக் கொடிக்கு பூவால் சிறப்பு வாழும் வீட்டுக்கு ஏற்றும் விளக்கால் சிறப்பு

பெண்: பாட்டுக்குப் பொருளின் நயத்தால் மதிப்பு பசு மாட்டுக்குப் பிறந்த கன்றால் மதிப்பு

பெண்: கொடி தந்த பூவாய் பூ தந்த மணமாய் மடி மீது வளர்ந்தாய் மகனே நீ வாழ்க

பெண்: நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம்

பெண்: கண் பார்க்கும் இடத்தில் நீ தான் இருப்பாய் எந்தன் கை தீண்டும் பொருளில் நீ தான் இருப்பாய்

பெண்: கண் பார்க்கும் இடத்தில் நீ தான் இருப்பாய் எந்தன் கை தீண்டும் பொருளில் நீ தான் இருப்பாய்

பெண்: பண் சேர்த்துப் பாடும் பாட்டில் இருப்பாய்.. நான் பார்க்கின்ற எதிலும் நீ தான் இருப்பாய்…

பெண்: அன்புக்கு வடிவாய் பண்புக்குப் பொருளாய் இன்பத்தின் சுவையாய் என்றென்றும் வாழ்க

பெண்: நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம் நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம்