நந்தவனம் இந்தமனம் பாடல் வரிகள்
நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம் ஏலேலங் குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதை புரிந்த மனம் ஏலேலங் குயிலே
இதை மகனே நீ அறிந்தால்
எனக்கு இங்கு அதுவே போதுமடா
சில தவறை நான் புரிந்தால்
எதற்கு என்று வரும் நாள் கோருமடா
இதை கண்ணா உனக்கெடுத்து சொன்னால்
புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே என் மகனே
நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம் ஏலேலங் குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதை புரிந்த மனம் ஏலேலங் குயிலே
ஆகாயம் நிலமும்கூட அப்பப்பா வெப்பமாச்சு
கார்கால ஊத காற்று கத்திரி வெயில் ஆச்சு
கண்ணீர நான் தொடச்சு கை எழுத்து அழிஞ்சிடலாம்
தண்ணீரா ஊத்தினாலும் தலை எழுத்து அழிஞ்சிடுமா
என்ன பெத்த தாய்க்குக்கூட என் பேர் சொல்ல வெக்கம்தான்
என்ன செய்ய பாதை மாறி பிள்ளை சென்ற துக்கம்தான்
இருப்பினும் என்றும் இவன் மனம் அந்த தாயின் பக்கம்தான்
அன்னை சொல்லும் வார்த்தையை மீறி
எப்போதும் நான் செல்லாதவன்
என்ன சொல்ல காலத்தின் கொடுமை
இப்போது நான் பொல்லாதவன்
அட உனக்கும் ஒரு நாள்
நான் படும் பாடும் என்னென்று புரியுமடா
நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம் ஏலேலங் குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதை புரிந்த மனம் ஏலேலங் குயிலே
செல்வங்களும் வீடும் வாழ்வும் வந்தாலென்ன என்னோடு
எப்போதும் என் கால்கள் செல்லும் நியாயங்களின் பின்னோடு
எனகென இங்க இருப்பது ஒரு கொள்கை கோட்பாடு
என்னோடுதான் நிழலென வந்தால்
கண்ணே உந்தன் தாய்தானடா
பொன்னே எங்கள் வீரத்தை நீயும்
கொண்டாடிடும் சேய்தானடா
அட சுகமோ துயரோ வருவது வரட்டும்
ஒன்றாக இணைந்திருப்போம்
நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம் ஏலேலங் குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதை புரிந்த மனம் ஏலேலங் குயிலே
இதை மகனே நீ அறிந்தால் எனக்கு இங்கு அதுவே போதுமடா
சில தவறை நான் புரிந்தால் எதற்கு என்று வரும் நாள் கோருமடா
இதை கண்ணா உனக்கேடுத்து சொன்னால்
புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே என் மகனே
நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம் ஏலேலங் குயிலே
அன்று முதல் இன்று வரை
உள்ளதை புரிந்த மனம் ஏலேலங் குயிலே…
Movie: Kizhakku Karai
Lyrics: Vaali
Music: Deva