Lyricist Gangai Amaran

நந்தவனக் குயிலே புது இன்னிசை பாடல் வரிகள்

நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு
பிப்பீ பீப்பீப்பீ பிபி பீப்பீ பீப்பீப்பீ

நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு
சொல்லு கிளியே சோகம் எதற்கு
பறந்து திரிய வானம் இருக்கு
மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு

நடந்ததெல்லாம் கனவுதான் கனவுக்கு ஏன்
நீ அழுதாய் நீ அழுதாய்

உதிர்ந்ததெல்லாம் சருகுதான் வசந்த மகள் ஏன் அழுதாய்
எவரோடு எவர் வாழ்க்கை அதை ஆண்டவன் எழுதி வைத்தான்

உறவென்ன வரவென்ன அதை அவனே நடத்தி வைப்பான்
வாழ்க்கை என்றால் நாலும் இருக்கும்
புரிந்து கொள் கண்ணே வீண் சோகம் ஏனம்மா

நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு
சொல்லு கிளியே சோகம் எதற்கு
பறந்து திரிய வானம் இருக்கு
மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு
குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு

நல்லதையே நினைக்கலாம் நெஞ்சம் இங்கே வேறெதற்கு வேறெதற்கு
சென்றதெல்லாம் மறக்கலாம் இன்னும் இங்கே உறவிருக்கு
இது தேவன் அரசாங்கம் இதில் யாருக்கும் துன்பம் இல்லை

அலை பாயும் மனம் தானே இந்த மனிதற்கு பெரும் தொல்லை
தோளில் மாலை சூடவில்லை
சூடாத மாலை வீழ்ந்தால் சோகம் ஏனம்மா

நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு ஹோய் ஹோய்
குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு

சொல்லு கிளியே சோகம் எதற்கு
பறந்து திரிய வானம் இருக்கு
மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு ஹோய் ஹோய்
குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு
நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு…

Movie: Ponnu Veetukkaran
Lyrics: Gangai Amaran
Music: Yuvan Shankar Raja

Leave a Reply

Your email address will not be published.