Bharathiyar

நல்லதோர் வீணைசெய்தே பாடல் வரிகள்

நல்லதோர் வீணைசெய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

நல்லதோர் வீணைசெய்தே சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் சொல்லடி சிவசக்தி

நல்லதோர் வீணைசெய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணைசெய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடிசிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

நல்லதோர் வீணைசெய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

விசையுறு பந்தினைப் போல்
விசையுறு பந்தினைப் போல்  உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் – நித்தம்
நவம்எனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
உயிர்கேட்டேன் உயிர்கேட்டேன்…

தசையினைத் தீசுடினும் சிவ
சக்தியைப் பாடும்நல் அகம்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ
இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ

நல்லதோர் வீணைசெய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணைசெய்தே…

Movie: Varumayin Niram Sivappu
Lyrics: Subramania Bharati
Music: M. S. Viswanathan

Leave a Reply