புலமைப்பித்தன்

Naattukkulla Namma Song Lyrics

Movie: Viduthalai (1986)
Music: Chandrabose
Lyricists: Pulamaipithan
Singers: Malasiya Vasudevan, S. N. Surendar and Deepan Chakravarthi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சந்திரபோஸ்

குழு: …………..

ஆண்: நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண்: அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண்: ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண்: அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண்: கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
பெண்: உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி

ஆண்: ஹேஹே நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண்: அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண்: நேரிலே நீ பார்த்ததுண்டா வீர சிவாஜி ஹான்
பெண்: நீயும் இப்ப பார்த்துக்கய்யா கிட்ட வந்தாச்சு
ஆண்: கண்ணு குறி வைக்குது இப்போ பொறி வைக்குது
பெண்: அட நினைச்சாலே உடம்பெல்லாம் குப்புங்குது

ஆண்: கொஞ்சம் நில்லு நான் யாரு பக்கா கில்லாடி தில்லு முல்லு என்னான்னு காட்டப்போறேன்டி ஹா ஹான்

குழு: நாட்டுக்குள்ள இவரைப் பத்தி கேட்டுப் பாருங்க
ஆண்: ஹோய்
குழு: அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க.

குழு: லாலா லாலா லாலாலா லாலாலா லாலா லாலா லாலாலா லாலாலா..

ஆண்: சூரக்கோட்டை வாத்தியாரு என்ன நடிப்பு ஆஹான்
பெண்: காக்கி சட்டை மாட்டிக்கிட்டா என்ன துடிப்பு
ஆண்: தங்கப் பதக்கமுன்னு ஒரு படம் பார்த்தியா
பெண்: அந்த நடை என்ன உடை என்ன அசத்திட்டாரு

ஆண்: அம்மா கண்ணு நீ அந்த பாட்டை கேட்டியா
பெண்: மச்சான் மச்சான் நீ கொஞ்சம் பாடி காட்டைய்யா

ஆண்: சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆண்: வீர தீர கட்டபொம்மன் நானே அல்லவா ஹா வாள் எடுத்தால் தூள் பறக்கும்
பெண்: சேதி சொல்லவா
ஆண்: நம்ம முகம் பாத்துக்கோ சிம்மக் குரல் கேட்டுக்கோ இந்த டயலாக்க ஒருவாட்டி நீ கேட்டுக்கோ

ஆண்: இதை கேட்டா ஜக்கம்மா மீசை துடிக்கும்
பெண்: உன்னை பார்த்தா தன்னாலே வீரம் பிறக்கும்

ஆண்: நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண்: ஹேய் அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண்: ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண்: ஹா அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண்: கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
பெண்: உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி

ஆண்: ஹே ஹேய் நாட்டுக்குள்ள நம்மை பத்தி கேட்டுப் பாருங்க
பெண்: ஹேய் அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க

ஆண்: …….
பெண்: ………