Lyricist Kabilan

நான் நடந்தால் அதிரடி பாடல் வரிகள்

நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி நீ

நீ நடந்தால் அதிரடி உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி நான்

நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்

என் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா
உன் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

உள்ளத்தில் கூச்சல் நீ உள்ளுக்குள் காய்ச்சல் நீ
ரத்தத்தில் காதல் நீச்சல் நீ

மின்மினி கூட்டம் நீ தான் வெண்பனி மூட்டம் நீ தான்
மாங்கனி தோட்டம் நீ தானே

நீ தான் நிலவு பெத்த மகள் நீ தான் நிலவின் அத்தை மகன்
முந்தானை வீடு மூங்கில் காடு பத்து விரலாலே தீ முட்டுவேன்

ஏன் இந்த வேகம் வேண்டாம் மோகம்
காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்

மன்மத அம்பு நீ முறுக்கிய நரம்பு நீ இரவினில் வம்பு தும்பு நீ
வண்ணத்து பூச்சி நீ தான் கண்களில் பேச்சு நீ தான்
காதலின் சாட்சி என்றும் நீ..

நான் தான் முரட்டு ஜல்லிக்கட்டு நான் தான் பசிக்கு புல்லுக்கட்டு
கை நீட்டும் தூரம் காட்சி மாறும் பூவைக் கண்டாலே போதை ஏறும்

முன் பின்னே என்றும் ரோஜா கூட்டம்
நானோ உன் கையில் பொம்மலாட்டம்

நான் நடந்தால் அதிரடி என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி நீ

நீ நடந்தால் அதிரடி உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி நான்

நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்

என் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

உன் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா…

Movie: Sura
Lyrics: Kabilan
Music: Mani Sharma