Chinna Thayee cover

Movie: Chinna Thayee (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும் அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும் அடை மழைக்கு ஒதுங்கும் மைனா குருவி மயங்கி கிடக்கும் மெய்தான் தழுவி இப்போதும் அட எப்போதும்

பெண்: நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும் அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்

ஆண்: தண்ணீரில் வாழும் செம்மீன தூக்கி கண்ணீரில் நான் போட மாட்டேனே

ஆண்: அடி கஸ்தூரி மானே கண்ணாலே நானே கல்யாண பூமாலை போட்டேனே

பெண்: உன் பேரை சொல்லி ஓயாது உள் மூச்சு வாங்கும் பூமாது கை விட்டு போனால் தாளாது மண் விட்டு போகும் வாழாது

ஆண்: அடி ஆத்தாடி உன் மேல நான் வெச்ச பாசம்
பெண்: ஓ ஓ ஓ ஓ

ஆண்: ஆகாயம் போல் இங்கே சாகாமல் வாழும்
பெண்: நீ தான் நான் என்று நான்தான் நீ என்று ஜீவன் ஒன்று தேகம் ரெண்டு

ஆண்: நான் இப்போதும் அடி எப்போதும் நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும் அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்

பெண்: வைகாசி மாசம் கை வீசி வந்த சங்கீத பூங்காத்து நீதானா

பெண்: உன் சங்கீதம் கேட்டு சதிராட்டம் போடும் சிங்கார பூந்தோப்பு நான்தானா

ஆண்: உன் தேகம் எங்கும் பூ வாசம் கண்டாலே தீரும் ஆயாசம் ஒன்றல்ல நூறு மாமங்கம் ஆனாலும் வாழும் நம் நேசம்

பெண்: என் வாய் பேசும் பேச்செல்லாம் உன் பேச்சி தானே
ஆண்: ஓ ஓ ஓ ஓ

பெண்: உள் வாங்கும் மூச்செல்லாம் உன் மூச்சு தானே
ஆண்: ஆடும் பூந்தேரே ஓடும் பாலாறே என்னை சேரு ஏக்கம் தீரு

பெண்: நான் இப்போதும் அடி எப்போதும் நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும் அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும்

ஆண்: அடை மழைக்கு ஒதுங்கும் மைனா குருவி மயங்கி கிடக்கும் மெய்தான் தழுவி இப்போதும் ஹோய் எப்போதும்

ஆண்: நான் இப்போதும் எப்போதும் உன்னுடன் இருக்க வேணும்
பெண்: அட முப்போதும் தப்பாம மந்திரம் படிக்க வேணும் பெண் &
ஆண்: ஆஆ ம்ம்ம்