Annan Oru Koyil cover

Movie: Annan Oru Koyil (1977)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and Vanijayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல் இன்பக் காதல் அம்மம்மா என்னம்மா

பெண்: காட்டினிலே கூடு கட்டி கூட்டினிலே குருவி ரெண்டு கூடல் கொஞ்சம் ஊடல் அம்மம்மா என்னம்மா

பெண்: ஆரண்யக் காண்டமிதை தொடங்கு அயோத்தி பஞ்சணை போல் மயங்கு ஆரண்யக் காண்டமிதை தொடங்கு அயோத்தி பஞ்சணை போல் மயங்கு சாகுந்தலம் படிக்க இறங்கு தலையடியில் கை வைத்து உறங்கு தலையடியில் கை வைத்து உறங்கு அம்மம்மா என்னம்மா

ஆண்: நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல் இன்பக் காதல் அம்மம்மா என்னம்மா

பெண்: ஆ….

ஆண்: ஆ..ஆ…ஆ.

பெண்: ஆ..ஆ…ஆ.

ஆண்: பாலோடு பாத்திரத்தை எடுத்து பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து தாகங்கள் தீரும் வரை குடித்து சல்லாப நாடகத்தை நடத்து சல்லாப நாடகத்தை நடத்து அம்மம்மா என்னம்மா

பெண்: தேனுண்ட செங்கனி வாய் இரண்டு ஸ்ருங்கார ராகமென திரண்டு

ஆண்: நான் உண்ணும் வேளையிலே மிரண்டு நாணத்தில் போவதென்ன உருண்டு நாணத்தில் போவதென்ன உருண்டு

பெண்: அம்மம்மா

ஆண்: என்னம்மா நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல் இன்பக் காதல்

பெண்: அம்மம்மா

ஆண்: என்னம்மா