Lyricist Vaali

முத்து நகையே முழு நிலவே பாடல் வரிகள்

முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே
முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே

கண் இரண்டும் மயங்கிட கன்னி மயில்
உறங்கிட நான் தான் பாட்டெடுப்பேன் 
உன்னை தாய் போல் காத்திருப்பேன்

முத்து நகையே முழு நிலவே 
குத்து விளக்கே கொடி மலரே
இன்னும் பல பிறவிகள் நம்முடைய 
உறவுகள் வாழும் தொடர் கதை தான் 
உந்தன் தேசம் வளர் பிறை தான்

முத்து நகையே முழு நிலவே 
குத்து விளக்கே கொடி மலரே

உன்ன பாத்து ஆச பட்டேன் அத பாட்டில் சொல்லி புட்டேன் 
நீயும் தொட நானும் தொட 
நாணம் அது கூச்சமிட அட்டை போல் ஒட்டி இருப்பேன்

இந்த காதல் பொல்லாதது ஒரு காவல்
இல்லாதது ஊத காத்து வஞ்சி மாது 
ஒத்தையில வாடும் போது போர்வை
போல பொத்தி அணைப்பேன்

ஆறு ஏழு நாளாச்சி விழி மூடி 
அடி ஆத்தாடி அம்மாடி உன்னை தேடி 
நீதானே மானே என் இளஞ்ஜோடி 
உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி

நித்தம் தவித்தேன் நீ வரும் வரைக்கும்

முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே
முத்து நகையே முழு நிலவே குத்து விளக்கே கொடி மலரே

புள்ளி மானு பெண்ணானதா கெண்ட மீனு கண்ணானதா 
பூ முடிச்சி பொட்டு வச்சி புன்னகையில் தேன் தெளிச்சு 
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா

அட வாயா கைய தொடு பள்ளி பாடம் 
கத்து கொடு ஆவணியில் பூபடைஞ்சு 
தாவணிய போட்டு கிட்ட சின்ன
பொண்ணு ஆசை விடுதா

ஆவாரம் பூவாக விடுவேனா 
ஒரு அச்சாரம் வெய்காம இருப்பேனா
தேனாறும் பாலாறும் கலந்தாச்சி 
அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு

என்ன படச்சான் நீ துணை வரத்தான்

முத்து நகையே முழு நிலவே 
குத்து விளக்கே கொடி மலரே

கண் இரண்டும் மயங்கிட கன்னி மயில்
உறங்கிட நான் தான் பாட்டெடுப்பேன் 
உன்னை தாய் போல் காத்திருப்பேன்

முத்து நகையே முழு நிலவே 
குத்து விளக்கே கொடி மலரே…

Movie: Samundi
Lyrics: Vaali
Music: Deva

Leave a Reply