music director yuvan shankar raja images

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வாழ்க்கை வரலாறு 

Name Yuvan Shankar Raja
Born Name Yuvan Shankar Raja
Age 42 (August 31, 1979)
Occupation Film Composer, Lyricist, Music Director, Songwriter, Singer, Instrumentalist, Arranger, Orchestrator, Record Producer, Film Producer
Parents Name Ilaiyaraaja (Father)

Jeeva Rajayya (Mother)

Spouse Name Sujaya Chandran (2005 to 2008 Divorce),

Shilpa Mohan (2011 to 2014 Divorce),

Zafroon Nisa Present

Children Ziya Yuvan (Daughter)

யுவன் சங்கர் ராஜா தமிழ்த் திரைப்பட இசைக்கலைஞர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் ஆவார். பெரும்பான்மையாக தமிழ் படங்களிள் பணியாற்றுகிறார். பல்துறை இசையமைப்பாளராகக் கருதப்படும் இவர், குறிப்பாக மேற்கத்திய இசையைப் பயன்படுத்தியதற்காக அறியப்படுபவர் , மேலும் தமிழ் திரைப்படம் மற்றும் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர்.

தமிழ் நாட்டில் “ரீமிக்ஸ்கலாச்சாரத்தை தொடங்கி அதனை பிரபலபடுத்தியவர். ராம் படத்தின் இசைக்காக 2006 இல் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் இவர். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் விசுவாசமான ரசிகர் பட்டாளம் அவருக்கு “யூத் ஐகான்” என்ற புனைப்பெயரைப் பெற்றுத்தந்தது.

music director yuvan shankar raja images

Music Director Yuvan Shankar Raja Childhood Days in Tamil

இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான இளையராஜாவின் மூன்றாவது மற்றும் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா ஆகஸ்ட் 31, 1979 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் பின்னணி பாடகர்- இசையமைப்பாளர் பவதாரிணியின்  தம்பி.

Music Director Yuvan Shankar Raja Early Life in Tamil

யுவன் ஷங்கர் ராஜா தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ்  ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு வரை மற்றுமே பயின்ற யுவன் பின்னர் ஜேக்கப் மாஸ்டரிடமிருந்து இசையைக் கற்கத் தொடங்கினார். இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியுடன் இணைந்த சென்னையில் உள்ள “மியூசி மியூசிகல்” என்ற பியானோ வகுப்புகளில் கலந்துக்கொண்டார்.

தான் எப்போதும் ஒரு விமானி ஆகவும், உலகம் முழுவதும் பயணிக்க விரும்புவதாகவும் யுவன் சங்கர் ராஜா கூறினார், ஆனால் தன்னை சுற்றியுள்ள இசையுடன் வளர்ந்ததால், ​​இறுதியில் இசைக்கலைஞரானார்.

Music Director Yuvan Shankar Raja Marriage Life in Tamil

யுவன் சங்கர் ராஜா அவரது தோழியான சுஜாயா சந்திரனை மார்ச் 21, 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது.

அதன் பிறகு யுவன் ஷில்பா மோகன் என்பவரை இரண்டாவதாக செப்டம்பர் 1, 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது.

பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். அதன் பின் ஜனவரி 1, 2015 ஆம் ஆண்டு சபிரூன் நிஷா என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டார், இவர்கள் இருவருக்கும் ஜியா யுவன் என்ற ஒரு மகள் உள்ளார்.

music director yuvan shankar raja images

Music Director Yuvan Shankar Raja Entry in Cini Field in Tamil

1996 ஆம் ஆண்டில், இசையை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளுமாறு அவரது தாயார் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா ஒரு ஆல்பத்திற்கான தாளங்களை இசையமைக்கத் தொடங்கினார். அரவிந்தன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா, யுவனின் சில இசைக்கோர்வைகளைக்  கேட்டபின், அப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளுக்காக இசையமைக்கச் சொன்னார்.

அவ்விசையால் ஈர்க்கப்பட்டு, அப்படத்தின் முழு இசையின் பொறுப்பையும் யுவனுக்கு வழங்கினார், பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, யுவன் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்; இவ்வாறு யுவனின் இசைப்பயணம் தொடங்கியது. யுவன் அரவிந்தன் படத்திற்கு இசையமைக்கும்போது அவருடைய வயது 16. இன்றளவிலும் அச்சிறுவயதில் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் யுவன். தான் இசையமைக்க வந்தது முற்றிலும் தற்செயலானது என்று குறிப்பிட்டிருந்தார்.

இயக்குனர் வசந்த் அவருடைய பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்திற்கு இசையமைக்க யுவனை அனுகினார், யுவனும் ஒப்புக்கொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் இசைக்காக யுவனுக்கு பாராட்டுகள் குவிய தொடிங்கின. அதன் இசை முற்றிலும் மாறுபட்ட புதுமையான முயற்சி என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டியது, ராஜா என்ற பெயருக்கு தகுதியுடையவர் என்று குறிப்பிட்டு இருந்தது. மிகவும் பாராட்டப்பட்ட “இரவா பகலா”, “சுடிதார் அணிந்த்து”  போன்ற பாடல்கள் யுவனை குறிப்பாக இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியது.

2001 ஆம் ஆண்டு செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை. இப்படத்தை கஸ்தூரி ராஜா இயக்கினார், ஆனால் அவரது மகனான செல்வராகவன் திரைக்கதை எழுதி, படத்தின் இசைக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றினார். துள்ளுவதோ இளமையின் இசை இளையத்தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது. இப்படம் செல்வராகவனின் தம்பியும் நடிகருமான தனுஷின் அறிமுகப்படமாகும்.

music director yuvan shankar raja images

வணிகரீதியாக இப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து வெளிவந்த பாலாவின் நந்தா(2001) திரைப்படத்திற்கு யுவனுக்கு பாராட்டுகள் குவிய தொடங்கின. அதற்கு அடுத்த வருடம் வெளியான ஏப்ரல் மாதத்தில்(2001) படத்தின் இசையும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது. பிறகு வந்த திரைப்படங்கள் காதல் சாம்ராஜ்யம்-2002 (படம் திரைக்கு வரவில்லை, பாடல்கள் மட்டும் வெளிவந்தது) மௌனம் பேசியதே-2002, புன்னகை பூவே-2002 (யுவனுக்கு படத் திரையில் அறிமுகம்)

Music Director Yuvan Shankar Raja Film List in Tamil

திரைப்படம் ஆண்டு
அரவிந்தன் (1997)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
உனக்காக எல்லாம் உனக்காக (1999)
தீனா (2000)
துள்ளுவதோ இளமை (2001)
மனதை திருடி விட்டாய் (2001)
நந்தா (2001)
ஏப்ரல் மாதத்தில் (2002)
மௌனம் பேசியதே (2002)
புன்னகைப் பூவே (2002)
வின்னர் (2003)
காதல் கொண்டேன் (2003)
புதிய கீதை (பாடல்கள் மாத்திரம்) (2003)
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2003)
பேரழகன் (2004)
7 ஜி ரெயின்போ காலனி (2004)
மன்மதன் (2004)
ராம் (2005)
அறிந்தும் அறியாமலும் (2005)
ஒரு கல்லூரியின் கதை (2005)
சண்டக்கோழி (2005)
அகரம் (2005)
புதுப்பேட்டை (2005)
பட்டியல் (2006)
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)
வல்லவன் (2006)
திமிரு (2006)
பருத்திவீரன் (2006)
தாமிரபரணி (2006)
தீபாவளி (2007)
சென்னை 600028 (2007)
சத்தம் போடாதே (2007)
கற்றது தமிழ் (2007)
வேல் (2007)
பில்லா 2007 (2007)
சரோஜா (2008)
யாரடி நீ மோகினி (2008)
சிவா மனசுல சக்தி (2009)
சர்வம் (2009)
யோகி (2009)
பையா (2009)
கோவா (2010)
பாணா காத்தாடி (2010)
காதல் சொல்ல வந்தேன் (2010)
தில்லாலங்கடி (2010)
நான் மகான் அல்ல (2010)
பாஸ் (எ) பாஸ்கரன் (2010)
வானம் (2011)
அவன் இவன் (2011)
ஆரண்ய காண்டம் (2011)
மங்காத்தா (2011)
கழுகு (2012)
பில்லா 2 (2012)
அமீரின் ஆதிபகவன் (2013)
மூன்று பேர் மூன்று காதல் (2013)
கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013)
தங்க மீன்கள் (2013)
ஆதலால் காதல் செய்வீர் (2013)
பிரியாணி (2013)
ஆரம்பம் (2013)
அஞ்சான் (2014)
மாஸ் (2015)
தர்மதுரை (2016)
சென்னை600028-2 (2017)
நெஞ்ஞம் மறப்பதில்லை (2020)
தரமணி (2017)
பேரன்பு (2019)
சூப்பர் டீலக்ஸ் (2019)
NGK (2019)
நேர்கொண்டபார்வை (2019)
மாமனிதன் (2022)
மாநாடு (2021)
வலிமை (2022)

music director yuvan shankar raja images

Music Director Yuvan Shankar Raja Awards and Recognition

யுவன் இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்; 2004 ஆம் ஆண்டில், 7 ஜி ரெயின்போ காலனி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது மற்றும் 2009 ஆம் ஆண்டில் ஒய்! என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறப்பு விருதினைப் பெற்றார். பிலிம்பேர் விருதுகளுக்காக ஆறு பரிந்துரைகளையும், 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு தமிழக மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.

Director Yuvan Shankar Raja Social Media Link

Reference: Wikipedia