Munthanaiya Naan Pudichen Song Lyrics

Movie: Purusha Lakshanam (1993)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ…ஆ..ஆ…ஆஹ்…ஆஅ..

ஆண்: முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல
அவ கொஞ்சம் பாக்கல

ஆண்: உத்தமிதான் தெனம் அன்பு வச்சா
மத்தியில ஒரு வம்ப வெச்சா
நியாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க
நியாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா

ஆண்: முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல

ஆண்: ஆஅ…ஆ..ஆ…ஆஹ்…ஆஅ..

ஆண்: லட்டு லட்டு ஒரு சிட்டு சிட்டு
அத தேடிப் புடிச்சேன்
முல்ல மொட்டு மொட்டு அத தொட்டுத் தொட்டு
மனம் வாடித் தவிச்சேன்

ஆண்: பட்டு பட்டு தெனம் கெட்டு கெட்டு
ஒரு பாடம் படிச்சேன்
இப்ப பட்ட முதல் அந்த பாரீன் வரை
ரெண்டு பாட்டில் அடிச்சேன்

ஆண்: பொல்லாத ஆசையினாலே.ஹே ஹே
பொல்லாத ஆசையினாலே
பொண்ணோட பேச்சை நம்பி
இல்லாத ஊருக்குத்தானே
எல்லோரும் போறோம் தம்பி

ஆண்: சம்சாரம்தான் புளிச்சுப் போச்சு
சன்யாசம்தான் புடிச்சுப் போச்சு
இன்னும் என்ன எடத்த மாத்து
எல்லாம் இங்கே படுதா போத்து

ஆண்: முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
ஹான் அந்த சுந்தரி பேச்சுல…

ஆண்: ததரின னா..ஆ…ஆ…ஆஅ..ஆஹ்.

ஆண்: முத்து முத்தா நல்ல கொத்து கொத்தா
அவ பூத்து சிரிச்சா
அந்த முத்துக்குள்ள ஒரு சொத்தையத்தான்
கண்ணில் மூடி மறைச்சா

ஆண்: செட்டு செட்டா வெள்ளித் தட்டு தட்டா
அவ சீரு கொடுத்தா
அந்த தட்டு என்ன கை சுட்டதுன்னு
கெட்ட பேரு எடுத்தா

ஆண்: மல்லாக்க படுத்துப் பார்த்தேன்..ஓ.ஓ.
என்னாங்கடி டோய்
மல்லாக்க படுத்துப் பார்த்தேன்
மவுண்ட் ரோடு வெறிச்சுப் போச்சு
என் வீட்டில் வெளக்கு போட்டேன்
எதிர் வீடு வெளிச்சம் ஆச்சு

ஆண்: பொண்டாட்டின்னா புருஷன் ஒண்ணு
என் வீட்டுல இன்னொரு கண்ணு
என்ன கதை புரியலயின்னு
ஒத்தையில தவிக்கிறேன் நின்னு

ஆண்: முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல
அவ கொஞ்சம் பாக்கல

ஆண்: உத்தமிதான் தெனம் அன்பு வச்சா
மத்தியில ஒரு வம்ப வெச்சா
நியாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க
நியாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா

ஆண்: முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல..ஹோய்..