Lyricist Pa.Vijay

முதல் முதல் பார்த்தேன் பாடல் வரிகள்

முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை
எனக்குள்ளே இன்று புது வித மோதல்
இதன் பெயர் தானா உலகத்தில் காதல்

நான் சுவாசித்த காற்றினை நேசித்து நீ அதை சுவாசிக்க வேண்டுமடா
எனது பெயருக்கே உன்னை எழுதி தந்திடு
எனது மார்பினில் தினமும் தூங்க வந்திடு

ஓ முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை

மேகம் மட்டும் சுவராகும் குளியல் அறையை நான் கேட்பேன்
உனது கண்கள் மட்டும் காண சின்ன துவாரம் அதில் வைப்பேன்

நூற்றி எட்டு விண்மீனை ஒன்று சேர்த்து நீ கட்டு
எந்தன் காலில் கொலுசு போல கட்டி விட்டு தாலாட்டு

அட மயிலின் இறகால் செய்த ஒரு காலணி நானும் கேட்பேன்
அட இரவினில் ஓட கடிகாரம் தான் வீட்டில் வேண்டுமே

என்னை கேட்டு தான் நீயும் மூச்சு விடணுமே
கேட்டிடாமலே என்னை நீயும் தொடணுமே

முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் இழந்தேன் என்னை

வேலை நேரம் நீ சென்றால் மோக நேரம் நான் கொண்டால்
ஒற்றை முடியில் கட்டி வைப்பேன் வெளியில் போக கூடாது

சின்ன சின்ன முத்தத்தை சமைத்து நானும் தருவேனே
வெட்கம் தொட்டு கூச்சம் தொட்டு முத்த உணவு தின்போம் வா

அட எண்ணை நுரையை அள்ளி பூ மெத்தை செய்ய சொல்லி
நான் போதும் போதும் என்னும் வரையில் மோகம் வேண்டுமே

மீசை குத்தியே ஆசை காயம் செய்யடா
இன்ப காயத்தில் நீயும் எச்சில் தடவவா

ஹான் முதல் முதல் பார்த்தேன் உன்னை
முழுவதும் இழந்தேன் என்னை…

Movie: Priyasakhi
Lyrics: Pa. Vijay
Music: Bharadwaj