Mella Pesu Mella Pesu Song Lyrics

Movie: Yaen (1970)
Music: T. R. Pappa
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: மெல்ல பேசு மெல்ல பேசு மெல்ல பேசு மெல்ல பேசு கண்ணாடி பாத்திரத்தை கல் மீது வைப்பதுபோல் மெல்ல பேசு மெல்ல பேசு

பெண்: அக்கம் பக்கம் பார்த்து
ஆண்: ஹ்ம்ம்
பெண்: ஆசை பின்னல் போட்டு
ஆண்: ஒஹ்
பெண்: அக்கம் பக்கம் பார்த்து ஆசை பின்னல் போட்டு
ஆண்: கன்னங்களை சேர்த்து காதுக்குள்ளே பேசு
பெண்: ஸ்ஸ்ஸ்ஹ் மெல்ல பேசு மெல்ல பேசு…

ஆண்: கைவளைத்தால் உன் கைவளைகள் என் காவலில் ஆடட்டுமே
பெண்: காற்சலங்கை உன் கால்களுடன் என் காதலை பேசட்டுமே

ஆண்: இன்பம் உண்டு
பெண்: ஹ்ம்ம்
ஆண்: அள்ளி வீச
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: இன்பம் உண்டு அள்ளி வீச
பெண்: இதழ்களினால் என்ன பேச..
ஆண்: இச் ச் ச் மெல்ல பேசு
பெண்: ஸ்ஸ் மெல்ல பேசு

ஆண்: இருப்பதெல்லாம் இன்று தீர்ந்து விட்டால் பின்பு என்னதான் பேசுவது
பெண்: இலை மறைவு கொஞ்சம் காய் மறைவு அந்த இன்பந்தான் வாழுவது

ஆண்: சொல்லி தரும் கலை இல்லையே… சொல்லி தரும் கலை இல்லையே…
பெண்: சொர்க்கத்துக்கு விலை இல்லையே.
ஆண்: ஹோ…இச் ச் ச் மெல்ல பேசு
பெண்: மெல்ல பேசு
ஆண்: கண்ணாடி பாத்திரத்தை
பெண்: கல் மீது வைப்பதுபோல் மெல்ல பேசு
ஆண்: ஸ் மெல்ல பேசு
பெண்: ஸ் மெல்ல பேசு
ஆண்: ஸ்ஸ்ஹ்..