Movie: Anbu Engey (1958)
Music: S. Vedhachalam
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: K. Jamunarani
Added Date: Feb 11, 2022
பெண்: மேலே பறக்கும் ராக்கட்டு மின்னல் பூச்சி ஜாக்கட்டு ஆளை மயக்கும் பேஸ்கட்டு அதுதான் இப்போ மார்க்கட்டு மாமா மாமா மஜா…. மாமா மாமா மஜா… மாமா மாமா மஜா..
பெண்: மைனர் தம்பி மனசைப் பறிக்கும் புல்புல் மைனா மந்திர தந்திர வேலைக்கெல்லாம் மசியாது நைனா மாதக் கணக்கு காதல் ஜூரத்தை தணித்திடுமே கொயினா மாத்திரை எந்தன் கண்ணிலிருக்கு பார்த்துக்கோ நைனா மாமா மாமா மஜா..மாமா மாமா மஜா.. மாமா மாமா மஜா..
பெண்: அன்ன நடையில் ஆயிரம் மைனர் அசந்தே விடுவாங்க மின்னல் இடையைக் கண்டாலே மெய் மறந்தே விடுவாங்க
பெண்: பின்னல் சடையின் பின்னால் வந்து பேட்டிக்கு நிப்பாங்க பெரிய பெரிய மகாராசனும் போட்டிக்கு வருவாங்க.. பெரிய பெரிய மகாராசனும் போட்டிக்கு வருவாங்க..
குழு: யா யா யா யா யா யா…
பெண்: மேலே பறக்கும் ராக்கட்டு மின்னல் பூச்சி ஜாக்கட்டு மாமா மாமா மஜா…. மாமா மாமா மஜா… மாமா மாமா மஜா..