Aahaa Kalyanam cover

Movie: Aahaa Kalyanam (2014)
Music: Dharan Kumar
Lyricists: Thamarai
Singers: Swetha Mohan and Gunasekaran Balasubramanian

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தரண் குமார்

பெண்: மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது

பெண்: விருப்பம் பாதி தயக்கம் பாதி கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால் அலைகள் அடித்தே கடலில் விழவா துரும்பை பிடித்தே கரையில் எழவா இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை ஓஹோ ஓஹோ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஹா

பெண்: மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது

ஆண்: சம்டைம்ஸ் ஐ நீட் யுவர் லவ் சம்டைம்ஸ் ஐ நீட் யுவர் ஹக் வாட் வுட் ஐ டூ நௌ வாட் வுட் ஐ டூ நௌ சம்டைம்ஸ் ஐ நீட் யூ சம்டைம்ஸ் ஐ பீல் யூ வாட் வுட் ஐ டூ நௌ வாட் வுட் ஐ டூ நௌ

பெண்: மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது

பெண்: யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க

ஆண்: கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண

பெண்: வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும் ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா நடந்து பழகும் விழுந்து அழுகும் குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமாம் ஆமாம்

ஆண்: இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம் தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா ஆஆ ஆஆ
பெண்: ஓ ஓ ஓஓஓ ஓஓஓ

ஆண்: விருப்பம் பாதி தயக்கம் பாதி கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால் அலைகள் அடித்தே கடலில் விழவா துரும்பை பிடித்தே கரையில் எழவா

பெண்: இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை

பெண்: மழையின் சாரலில் மழையின் சாரலில் நனைய தோன்றுது நடுங்க தோன்றுது பிழைகள் என்றே தெரிந்தும் கூட பிடித்துப் போனது புதையல் ஆனது