Lyricist Vaali

மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தீரா பாடல் வரிகள்

மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா

மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும்
மேஸ்திரி காதல் சாஸ்திரி
மார்பில் விளையாட மன்னன் கை விசைப் போட
ராத்திரி அடச்சீ போக்கிரி

மாறி உருமாறி ஓவியப்பெண் உனைத் தேடி
வருவேனே வாரித் தருவேனே… யே
தடை தாண்டும் படை வீரா

உடையாக அணிவிரா தம்பூரா மீட்டும் கிங்காரா
உனை நானும் அடையாது விழி வாசல்
அடையாது கஞ்சிரா தட்டக் கொஞ்சிரா

மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா

உன்னை நான் சந்தித்தால் உள்ளத்தில் தித்தித்தாய்
தகதிமித் தகதிமித் தாளம்
உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை
உதடுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்

பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன
முத்தமிட்டு சர்க்கரை நோய் வந்தாலென்ன

தினமும் தினமும் வரலாமா தவணை முறையில் தரலாமா
சொல்லடி சோன் பப்படி

செயலில் இறங்கு சீக்கிரமா மீனம் மேஷம் பாக்கணுமா
மென்னுடா என்னைத் தின்னுடா

மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா

அன்பே என் பேரென்ன நான் வாழும் ஊரென்ன
அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே

பெண்ணே என் பேச்செங்கே நான் வாங்கும் மூச்செங்கே
புரியாமல் தவிக்கின்றேன் மானே

காதலுக்குக் கேள்விக் கேட்டு மாளாதைய்யா
காமனுக்கு தாமதங்கள் ஆகாதைய்யா

கனலில் பனியாய் கரைவோமா கரைந்தே
கவிதை வரைவோமா சுட்டியே கண்ணுக் குட்டியே

உனையும் எனையும் புணைவோமா
உலகப் படமாய் தருவோமா
ஹஜ்ஜி மா செல்ல புஜ்ஜி மா

மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தீரா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

Movie: Indian
Lyrics: Vaali
Music: A. R. Rahman