Lyricist Yugabharathi

மன்மத ராசா நீ பாடல் வரிகள்

ராசா ராசா என் மன்மத ராசா
தனியா ஏங்குது ரோசா கொஞ்சம் சேத்துக்க ராசா

மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா என்ன கணக்கு பண்ணாதே

என் பச்சை உடம்புல உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே
என் ஒத்த உசுருல முத்து கொலுசுல உன்ன வெச்சி வெச்சி பூட்டாதே
மன்மத ராசா என் மன்மத ராசா

ஹே மன்மத ராசா மன்மத ராசா உன்ன முழுசா தின்னானே
ஹே கண்ணுல லேசா கண்ணுல லேசா பித்து பிடிச்சி நின்னானே

உன் பச்சை உடம்புல உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு வச்சானே
உன் ஒத்த உசுருல முத்து கொலுசுல என்ன வெச்சி வெச்சி தச்சானே
மன்மத ராசா என் மன்மத ராசா

ஹே ஜில்லா ஹே ஜில்லா ஹே சிலுக்கு சிக்கா ஜில்லா
ஹே ஜில்லா ஹே ஜில்லா ஹே சிலுக்கு சிக்கா ஜில்லா

என்ன உறைய வச்சு உன்ன நெறைய வச்சு
சும்மா அலைய வச்சியே வச்சியே வச்சியே

ரத்தம் உறைய வச்சு முத்த சிறையில் வச்சு
எல்லாம் புரிய வச்சியே வச்சியே வச்சியே

ஹே வாயோடு வாயா இனிக்க வச்ச
என்ன முந்தானையோடு முடிச்சு வச்ச

ஹே பாயோடு பாயா விரிச்சு வச்ச
என்ன பாவத்தபோல மறச்சு வச்ச

ஹே அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச
புது அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச
அடி அதுக்குள்ள என்ன நீ எங்க வச்ச

ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா லேசா லேசா லேசா ஆகுது லேசா
ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா லேசா லேசா லேசா ஆகுது லேசா

ஹே தன்னா ஹே நன்னா ஹே தன்னா நன்னா நானனா
தன்னா ஹே தனனா ஹே தன்னா நானா நானனா

நெஞ்ச உருக வச்சு கொஞ்சம் பருக வச்சு
என்ன நெருங்க வச்சியே வச்சியே வச்சியே

ஹே முந்தி சரிய வச்சு மோகம் தெரிய வச்சு
என்ன களைய வச்சியே வச்சியே வச்சியே

ஹே காய்ச்சாத பாலா திரிய வச்ச என்ன கண்டத்தை போல எரிய வச்ச
ஆத்தாடி நீதான் அனுபவிச்ச என்ன கூத்தாடி போல அலங்கரிச்ச

ஹே இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச
இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச
ஏன் உலகத்த அதுக்குள்ள பதுக்கி வச்ச

ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா ஆகுது லேசா

ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா ஆகுது லேசா

மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா பித்து பிடிச்சி நின்னானே

என் பச்சை உடம்புல உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே
என் ஒத்த உசுருல முத்து கொலுசுல என்ன வெச்சி வெச்சி தச்சானே
மன்மத ராசா மன்மத ராசா

மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா
என்ன கணக்கு பண்ணேன் டா பண்ணேன் டா பண்ணேன் டா…

Movie: Thiruda Thirudi
Lyrics: Yugabharathi
Music: Dhina