Aani Ver cover

Movie: Aani Ver (2015)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள அடிச்சாக்கா தேறும் ஒடம்பு ஏ வாயேண்டா பிளேடு பக்கிரி போடேண்டா தாளம் இப்படி சல்லு ஆ சல்லு ஆ சல்லு ஏ வாயேண்டா பிளேடு பக்கிரி போடேண்டா தாளம் இப்படி தாரேண்டா துண்டு பீடி தம் அடிச்சுக்கடா..

குழு: மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள அடிச்சாக்கா தேறும் ஒடம்பு

ஆண்: ஏஹே

ஆண்: அய்யோ மச்சான் சமஞ்ச பொண்ணு அய்யோ மச்சான் சமஞ்ச பொண்ணு தொட்டுடக் கூடாதே அதுங்காட்டி கைய கீய வச்சுப் புடாதே அதுங்காட்டி கைய கீய வச்சுப் புடாதே

ஆண்: தள்ளி நில்லு.ஆ.. தள்ளி நில்லு நானா வந்து கட்டிப் புடிப்பேன் நானாச்சு ஒன்னக் கட்டிக்க நடுச் சாமம் பாத்து தொட்டுக்க

குழு: சல்லு ஆ சல்லு ஆ சல்லு

ஆண்: ஆ .நானாச்சு ஒன்னக் கட்டிக்க நடுச் சாமம் பாத்து தொட்டுக்க கன்னாலம் ஆகும் முன்னே சாந்தி முகூர்த்தம் அய்யோ..

குழு: மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள அடிச்சாக்கா தேறும் ஒடம்பு

ஆண்: யா ..

ஆண்: எங்க வெக்க நான் எப்புடி வெக்க எங்க வெக்க எப்புடி வெக்க ரோசா ஒனக்கு இருக்குது ஆச ஒம் மேல் ராசா எனக்கு இருக்குது ஆச ஒம் மேல் ராசா எனக்கு அத்த பொண்ணு கிட்ட வந்து முத்தம் குடுடி ஆ மாராப்பு கண்ண இழுக்க மைனாவோ என்ன இழுக்க

குழு: சல்லு ஆ சல்லு ஆ சல்லு

ஆண்: மாராப்பு கண்ண இழுக்க மைனாவோ என்ன இழுக்க ஆத்தாடி எம் மனசு என்னமோ பண்ணுதடி..

ஆண்: மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள அடிச்சாக்கா தேறும் ஒடம்பு

ஆண்: கோடி கோடி திருடி வெச்ச பெரிய பெரிய திருடன் எல்லாம் மாடி மன கட்டிகிட்டு வாழுறான் கஞ்சிக்காக திருடிப்புட்டு கையில் விலங்க மாட்டிப்புட்டு சின்னத் திருடன் ஜெயிலுக்குள்ள வாடுறான்

ஆண்: ஆ மன்னாரு நல்லாத்தான் சொன்னாரு ஆனாலும் வெளியே நீ சொல்லாதே பொல்லாப்பு கோவாலு மன்னாரு நல்லாத்தான் சொன்னாரு ஆனாலும் வெளியே நீ சொல்லாதே பொல்லாப்பு சொன்னாதான் சாயம் வெளுக்கும் எல்லோர்க்கும் ஞாயம் பொறக்கும் வந்தாச்சு ஜெயிலுக்குன்னே பயப்படலாமா..

குழு: சொன்னாதான் சாயம் வெளுக்கும் எல்லோர்க்கும் ஞாயம் பொறக்கும் வந்தாச்சு ஜெயிலுக்குன்னே பயப்படலாமா..

ஆண்: ஆமா மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள அடிச்சாக்கா தேறும் ஒடம்பு ஐயோ ஐயோ

குழு: மணியடிச்சா சோறு இது மாமியாரு வீடு களிக்கேத்த கீரக் கொழம்பு மாப்பிள்ள அடிச்சாக்கா தேறும் ஒடம்பு சல்லு ஆ சல்லு ஆ சல்லு