Manithargale O Manithargale Song Lyrics

Movie: Neethikku Thandanai (1987)
Music: M. S. Viswanathan
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Surendran

Added Date: Feb 11, 2022

ஆண்: மனிதர்களே ஓ மனிதர்களே மனிதர்களே ஓ மனிதர்களே ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை

ஆண்: துரோகங்கள் சபையில் ஏறும் தியாகங்கள் சிறையில் வாடும்

ஆண்: மனசாட்சி செத்துப் போனால் எது வந்து சாட்சி சொல்லும் மனசாட்சி செத்துப் போனால் எது வந்து சாட்சி சொல்லும்

ஆண்: சதிகாரர் போட்ட திட்டம் சபையேறி வென்றது

ஆண்: கண் கெட்டு போன சட்டம் தலையாட்டி நின்றது கண் கெட்டு போன சட்டம் தலையாட்டி நின்றது

ஆண்: மனிதர்களே ஓ மனிதர்களே மனிதர்களே ஓ மனிதர்களே ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை

ஆண்: விளையாடும் காசைக் கண்டால் வளையாத சட்டமுண்டோ

ஆண்: ஏன் அந்த நீதி தெய்வம் இரு கண்ணை மூடிக் கொண்டாள் ஏன் அந்த நீதி தெய்வம் இரு கண்ணை மூடிக் கொண்டாள்

ஆண்: அநியாயம் தன்னைக் கண்டு சகிக்காமல் போனதோ

ஆண்: அவள் கண்ணில் சிந்தும் ரத்தம் கறுப்பாக ஆனதோ அவள் கண்ணில் சிந்தும் ரத்தம் கறுப்பாக ஆனதோ.

ஆண்: மனிதர்களே ஓ மனிதர்களே மனிதர்களே ஓ மனிதர்களே ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை

ஆண்: பதவிக்கு ஆசை வந்தால் கொலை கூட தர்மம் தானே

ஆண்: வரலாற்றின் பக்கம் எல்லாம் வழிகின்ற ரத்தம் சாட்சி வரலாற்றின் பக்கம் எல்லாம் வழிகின்ற ரத்தம் சாட்சி

ஆண்: பாசங்கள் பந்தம் எல்லாம் மனிதனுக்கு தானடா

ஆண்: பதவிக்கு வாழ்க்கைப்பட்டால் இவை எல்லாம் ஏதடா பதவிக்கு வாழ்க்கைப்பட்டால் இவை எல்லாம் ஏதடா

ஆண்: மனிதர்களே ஓ மனிதர்களே மனிதர்களே ஓ மனிதர்களே ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை…