மனசுல சூரக் காத்தே பாடல் வரிகள்
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே
வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்
கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம்
ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை
சொல்லாத ஆசை என்னை சுட சுட காய்ச்சுதே
பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே
கண்ணிலே இல்லையே காதலும்..
நெஞ்சமே காதலின் தாயகம்
ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே
மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே
கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே
அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே
எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே
மூங்கிலே ராகமாய் மாறுதே மூச்சிலே வான் ஒலி பாடுதே
மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே
நிலவே சோரூட்டுதே கனவே தாலாட்டுதே
மின்னல் ஓசையும் காதிலே கேட்குதே
உந்தன் வாசனை வானவில் காட்டுதே…
Movie: Cuckoo
Lyrics: Yugabharathi
Music: Santhosh Narayanan