மனச மடிச்சு நீதான் பாடல் வரிகள்
மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற
உதட்டை கடிச்சி நீதான் என்னை உசுப்பு ஏத்துற
ஓரக்கண்ணுல நீதான் என்னை எதுக்கு பாக்குற
ஒதுங்கி நிக்குற போதும் என்னை உரசி பேசுற
தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா
ஒட்டிக் கிட்டு சித்தம்மா ஒண்ணா சேர்ந்து நிற்போமா
கட்டிக்கிட்டு காத்துலதான் கரைஞ்சி போவோமா
மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற
ஒதுங்கி நிக்குற போதும் என்னை உரசி பேசுற
அம்மம்மா குண்டுமல்லி ஆள இப்போ தூக்குது
அழகா கிட்ட வந்து மூடு ஏத்துது
சிலிர்க்கும் கொலுசு இப்போ அத்தான் பேரை சொல்லுது
அதுக்கும் இதுக்கும் சேர்த்து ஆட்டம் போடுது
சேலை பொத்தித்தான் செங்கரும்பு ஆடுதா
கடிச்சி திங்கத்தான் கட்டெறும்பு தேடுதா
காதல் ரேகத்தான் உள்ளங்கையில் ஓடுதா
கட்டில் கச்சேரி காதோடு தான் கேக்குதா
குற்றாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா
இரவே பத்தாதம்மா பகலும் பாக்கலாம்
ஓரக்கண்ணுல நீதான் என்னை எதுக்கு பாக்குற
உதட்டை கடிச்சி நீதான் என்னை உசுப்பு ஏத்துற
ஆஹா நீயும் குடிச்சா ஆத்து தண்ணி அள்ளித்தான்
குடிச்சி பார்த்தேன் அது ரொம்ப இனிக்குது
இரவில் மாமா உங்க நெனப்புல நான் தூங்கினா
நிலவில் பாய் விரிச்ச சுகமும் கிடைக்குது
காதல் சூரியன்தான் கண்ணுக்குள்ளே கரையுமே
மாமா பார்த்தாலே மஞ்சள் கூட சிவக்குமே
கண்ணைப் பார்த்தாலே கள் குடிச்ச போதைதான்
உன்னை நினைச்சாலே சொர்க்கத்துக்கு பாதைதான்
குற்றாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா
இரவே பத்தாதம்மா பகலும் உனக்குத்தான்
மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற
உதட்டை கடிச்சி நீதான் என்னை உசுப்பு ஏத்துற
தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா
ஒட்டிக் கிட்டு சித்தம்மா ஒண்ணா சேர்ந்து நிற்போமா
கட்டிக்கிட்டு காத்துலதான் கரைஞ்சி போவோமா
மனச மடிச்சு நீதான் உன் இடுப்பில் சொருகுற
ஒதுங்கி நிக்குற போதும் என்னை உரசி பேசுற…
Movie: Kannupada Poguthaiya
Lyrics: Kalai Kumar
Music: S. A. Rajkumar