Lyricist Kalaikumar

மாளவிகா மாளவிகா பாடல் வரிகள்

மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னை தொட்டு சொல்லும் சொல்லும்

நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீயில்லை
மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா

உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே
அப்போதே புதிதாக நான் பிறந்தேன்
அது சரி அது சரி அது சரி அது சரி

கண்ணாலே என்னோடு நீ பேச அப்போதே
என் பேரை நான் மறந்தேன்
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்

நழுவுகின்ற தாவணிதான் விடுமுறை கேட்கும் மாயமென்ன
தடுத்திடவே நினைத்தாலும் மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன
குடை இருந்தும் நனைகின்றோம் காதல் மழை பொழிகிறதே

நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீயில்லை
மாளவிகா மாளவிகா மனம் பறித்தாய் மாளவிகா

நீ சிந்தும் புன்னகையை பார்த்தாலும் நெஞ்செல்லாம்
சிலையாகி போவதென்ன
அது சரி அது சரி அது சரி அது சரி

உன் கண்கள் என் கண்ணை சந்திக்கும் நேரம் நான்
சிலையாக ஆவதென்ன
அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்

தூறல்தான் தேன்னாகும் விரலால் நீயும் தொட்டாலே
முள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலே

கரைகின்றேன் தேய்கின்றேன் உன் நினைவில் உறைகின்றேன்
நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீ இல்லை

மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா
தென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்
தேடி வந்து உன்னை தொட்டு சொல்லும் சொல்லும்

நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீயில்லை
மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகா…

Movie: Unnai Thedi
Lyrics: Kalaikumar
Music: Deva