Anubavi Raja Anubavi cover

Movie: Anubavi Raja Anubavi (1967)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்தாடி..

ஆண்: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே

ஆண்: ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே அநியாயம் ஆத்தாடியோ…

ஆண்: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஆண்: சீட்டுக்கட்டுக் கணக்காக இங்கே வீட்டக் கட்டி இருக்காக வீட்டக் கட்டி இருந்தாலும் சிலர் ரோட்டு மேலே படுக்காக

ஆண்: பட்டணத்துத் தெருக்களிலே ஆளு நிக்க ஒரு நிழலில்லையே வெட்டவெளி நிலமில்லையே நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே அடி சக்கே…

ஆண்: {வைக்கேலாலே கன்னுக் குட்டி மாடு எப்போ போட்டுது கக்கத்திலே தூக்கி வச்சாக் கத்தலையே என்னது} (2)

ஆண்: ரொக்கத்துக்கு மதிப்பில்லையே.. இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே…

ஆண்: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஆண்: ஊரு கெட்டுப் போனதுக்கு மூரு மாருக்கெட்டு அடையாளம் நாடு கெட்டுப் போனதுக்கு மெட்ராஸு நாகரிகம் அடையாளம்

ஆண்: தேராட்டம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே எங்க ஏரோட்டம் நின்னு போனா உங்க காரு ஓட்டம் என்னவாகும் ஏஹேஹே

ஆண்: {காத்து வாங்க பீச்சுப் பக்கம் காத்து நிக்கும் கூட்டமே நேத்து வாங்கிப் போன காத்து என்ன ஆச்சு வூட்டிலே} (2)

ஆண்: கெட்டுப்போன புள்ளிகளா வாழப் பட்டணத்தில் வந்தீகளா

ஆண்: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெதுவாப் போறவுக யாருமில்லே இங்கே சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே

ஆண்: ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும் வித்யாசம் தோணல்லே அநியாயம் ஆத்தாடியோ

ஆண்: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் அடி ஆத்தாடியே..