Lyricist Vaali

மாதுளம் கனியே பாடல் வரிகள்

மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே
மரகத மணியே என் மயில் இள மயிலே

மாறன் கணை போடும் விழியே
மாலை தன்னில் பாடும் மொழியே

மாறன் கணை போடும் விழியே
மாலை தன்னில் பாடும் மொழியே

மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே
மரகத மணியே என் மயில் இள மயிலே

தங்க மலர் பாதம் மேவி தாளம் போடும் கொலுசு போல
அங்கும் இங்கும் ஆடிப் பார்க்கும் ஆசை எனக்கு

ஓ செங்கமலம் போல தேவி தேரில் ஏறி உன்னைக் கூட
இங்கு வந்த நேரம் என்ன காதல் வழக்கு

அள்ளி அள்ளி கூடும் போது ஆசை வளர
அங்கம் எங்கும் காதல் என்ற பூவும் மலர

கிள்ளிக் கிள்ளி வாசம் பார்க்க மோகம் தொடர
சொல்லிச் சொல்லி காம தேவன் பாணம் படர

என்னை தினம் பாடும் குயிலே
வண்ணம் கொண்டு ஆடும் மயிலே

மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே ஓ…..
மரகத மணியே என் மயில் இள மயிலே ஆ…

ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

உச்சி முதல் பாதம் தோறும் நேரில் காண போதை ஏறும்
கொஞ்சிக் கொஞ்சி கூட வேண்டும் காலம் தோறும்

ஓ வெற்றிக் கொடி ஏற்றி ஏற்றி வேகமோடு தேரை ஓட்டி
சுற்றி வந்த ராஜராஜன் உன் தாழ் போற்றி

முற்றுகையை போட்ட போது மோகம் விடுமோ
முன் இருக்கும் மோக வாசல் தாகம் விடுமோ

கற்பனைக்கும் வேலி போட வேண்டும் தலைவா
காதலிக்கு நாணம் மேலும் கூடும் அல்லவா
மோகம் இசை பாடும் உடலே காமன் விளையாடும் திடலே

மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே ஓ……
மரகத மணியே என் மயில் இள மயிலே

மாறன் கணை போடும் விழியே
மாலை தன்னில் பாடும் மொழியே

மாறன் கணை போடும் விழியே
மாலை தன்னில் பாடும் மொழியே

மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே ஓ……
மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே…

Movie: Sami Potta Mudichu
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja