Lyricist Kabilan

மச்சான் பேரு மதுர பாடல் வரிகள்

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர

நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
ஹோய் பறையடிச்சா பாட்டு வரும்
உரையடிச்சா ஆட்டம் வரும் கட்டி வெல்லம்
உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே ஓஓ ஹோ ஓஓ
மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர

உருமி உருமி மேளம் இவ உரச உரச தாளம்
கூந்தல் முதல் பாதம் வரை இவகோடி ரூபா ஏலம்

உடுக்க உடுக்க இடுப்பே இது எந்த நாட்டு நடப்பே
தத்தளிக்கும் தேரழகு தக்காளி பழ செவப்பே

ஹே எட்டு கட்டி பாடுவேன் வூடு கட்டி ஆடுவேன்
பட்டி தொட்டி சேர்ந்து வந்தா பட்ட கத்தி வீசுவேன்

நாளு நல்ல நாளுதான் நடப்பதெல்லாம் தூளுடா
நூறு கோடி ஆளுகிட்ட என்னை பத்தி கேளுடா

அழகான முகமே ஹலோ ஹலோ சுகமே
சுட்டு விரல் தொட்டு புட்டா தீ பிடிக்கிது நகமே

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை

நெருப்பு நெருப்பு கோழி இவ நெருங்கி வந்த தோழி
வேர்வையிலே தீயணைக்கும் வித்தய கத்துக்கோடி

அருவி அருவி பாய்ச்சல் நான் உனக்குள் ஆடும் நீச்சல்
அலை போல நான் விளையாடினால்
அடங்காதோ உந்தன் காய்ச்சல்

படபடக்கும் சிட்டுடா பனாரசு பட்டுடா தங்கத்தால
செஞ்சு வச்ச தஞ்சாவூரு கட்டுடா

ஒத்தையாக ஓட வா ஓடி விளையாடவா
பத்து விரல் காத்திருக்கு பந்தல் ஒன்னு போடவா

அழகான திருடி எனக்குள்ளே இருடி கொஞ்சி கொஞ்சி பேசிக்கலாம்
கொஞ்ச நேரம் கூடி ஓஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஓ

மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர

நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஹோய் பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும்
கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே…

Movie: Madhurey
Lyrics: Kabilan
Music: Vidyasagar