Lyricist Pulamaipithan

மானே மரகதமே பாடல் வரிகள்

மானே மரகதமே மானே மரகதமே நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது பனி தூவும் மாலை வேளைதான்

மானே மரகதமே நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது இளவேனில் காலம் இது

இதமான நேரம் இது பனி தூவும் மாலை வேளைதான்
மானே மரகதமே

நேசம் வச்சு நெஞ்சில் வச்ச பூச்செடி நீயடி
பூவும் வச்சு பொட்டும் வச்ச பைங்கிளி உன் மடி

பாசம் வச்சு பாடும் பாட்டை கேளடி என் கண்மணி
உள்ளம் என்னும் வீட்டிலே ஒட்டி வச்ச ஓவியம்
எண்ணம் என்னும் ஏட்டிலே அச்சடிச்ச காவியம்

மனசுக்குள் கோயில் கட்டி மகராசி ஒன்ன வச்சு
பொழுதானா பூச பண்ணி வாழுறேன்

தேனே திரவியமே நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இதுஇதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான் மானே மரகதமே

ராகம் வச்சு புன்னை வனப் பூங்குயில் கூவுது
மோகம் வச்சு கன்னி உந்தன் பேரைதான் கூறுது

தேகம் ரெண்டும் கூடுகின்ற நாளிது நன் நாளிது
நட்ட நடு ராத்திரி சொப்பனங்கள் தோணுது
சொப்பனத்தில் தானடி கண்கள் உன்னை காணுது

அழகான தென்னஞ்சிட்டே இனி மேலும் உன்னை விட்டே
இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா

மானே மரகதமே நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது இதமான நேரம் இது

பனி தூவும் மாலை வேளைதான் தேனே திரவியமே
நல்ல திருநாள் இது தென்றல் தமிழ் பாடுது…

Movie: Enga Thampi
Lyrics: Pulamaipithan
Music: Ilaiyaraaja