×
Tuesday 11th of May 2021

Maalai Mangum Neram Song Lyrics in Tamil


மாலை மங்கும் நேரம் பாடல் வரிகள்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்

உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்

நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்

நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும்
நீ தான் காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்

பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் வீழ்ந்து பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்

தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு

உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்

காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்…

Movie: Rowthiram
Lyrics: Thamarai
Music: Prakash Nikki


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • April 20, 2021
Thavamindri Kidaitha Varame Song Lyrics in Tamil
  • April 13, 2021
Omana Penne Song Lyrics in Tamil
  • April 12, 2021
Mannipaaya Song Lyrics in Tamil