Lyricist Vairamuthu

லவ் பண்ணு லவ் பண்ணு பாடல் வரிகள்

ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின்
தீவே ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு ஓஹோ ஹோ ஹோ ஹோ

ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு என் வாலிப நெஞ்சம்
உன் காலடி கெஞ்சும் சிறு காதல் பிச்சை போடு கண்ணு

நா கெஞ்சி கேட்கும் நேரம் உன் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்
உடாதம்மா பீலாதம்மா

சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்
சுத்தாதம்மா ரீலுதாம்மா

உன் படுக்கை அறையிலே ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே விண்டர் சீசன் வேண்டுமா
நீ மாற சொன்னதும் நான்கு சீசனும் மாற வேண்டுமா
லவ் பண்ணு

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

எண்பது ஆண்டுகள் இளமை வேண்டுமா
மெய்யாகுமா மெய்யாகுமா

சொடக்கொன்று போட்டதும் சொர்க்கம் வேண்டுமா
மெய்யாகுமா மெய்யாகுமா

அட வெள்ளை வெள்ளையாய் ஓர் இரவு வேண்டுமா
புது வெளிச்சம் போடவே இரு நிலவு வேண்டுமா

உன்னை காலை மாலையும் சுற்றி வருவது
காதல் செய்யவே லவ் பண்ணு ஐயோ பண்ணு

எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு
லவ் பண்ணு ஐயோ பண்ணு

ஒரு புன்னகை பூவே சிறு பூக்களின் தீவே
நீ என்னை மட்டும் காதல் பண்ணு
என் வாலிப நெஞ்சம் உன் காலடி கெஞ்சும்
சிறு காதல் பிச்சை போடு கண்ணு

நீ கெஞ்சி கேட்கும் நேரம் என் நெஞ்சின் ஓரம் ஈரம்
அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ…

Movie: 12B
Lyrics: Vairamuthu
Music: Harris Jayaraj