Lyricist Na. Muthukumar

லேசா பறக்குது பாடல் வரிகள்

காதல் பிறக்கின்ற பருவம் பருவம் மௌனம்
புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம்
நிமிடம் கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேசா பறக்குது மனசு மனசு 
ஏதோ நடக்குது வயசுல 
லேசா நழுவுது கொலுசு கொலுசு 
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வலையில நெல்ல போல் 
உந்தன் நெனப்ப எனக்குள்ள சேக்குற 
அல்லிப்பூ குளத்துல கல்ல போல் 
உந்தன் கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்ன

கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம் 
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும் 
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும் 
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

லேசா பறக்குது மனசு மனசு 
ஏதோ நடக்குது வயசுல 
லேசா நழுவுது கொலுசு கொலுசு 
எங்கே விழுந்தது தெரியல

தத்தி தத்தி போகும் பச்ச புள்ள போல 
பொத்தி வெச்சுத்தானே மனசு இருந்ததே 
திருவிழா கூட்டத்தில் தொலையுறேன் சுகமா

தொண்ட குழி தாண்டி வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச உதடு நெனச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரி பகலாதான் நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி

பூட்டுன வீட்டுல தான் புதுசா பட்டாம் பூச்சி பறக்குதடா

கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம் 
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும் 
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும் 
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்

லேசா பறக்குது மனசு மனசு ஏதோ நடக்குது வயசுல
பூவா விரியுற உலகம் உலகம் தரிசா கிடந்தது இது வரை

ஒத்த மரம் போலே செத்து கெடந்தேனே 
உன்ன பார்த்த பின்னே உசுரு பொழச்சது 
சொந்தமா கிடைப்பியா சாமிய கேப்பேன்

ரெட்டை ஜட போட்டு துள்ளி திரிஞ்சேனே 
உன்ன பார்த்த பின்னே வெட்கம் புரிஞ்சதே 
உனக்கு தான் உனக்கு தான் 

பூமியில் பிறந்தேன் காவடி சுமப்பது போல் 
மனசு காதலை சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்கலடி

கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம் 
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும் 
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்…

Movie: Vennila Kabadi Kuzhu
Lyrics: Na. Muthukumar
Music: V. Selvaganesh

 

Leave a Reply