Lyricist Vairamuthu

குளிருது குளிருது பாடல் வரிகள்

குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி

கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை

குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு

நெஞ்சுக்குள்ளே எரியுது நெருப்பு
இத நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடம் மாறும்
பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்
மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்

முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத் துளி மழை துளி தொல்லையா
அட அடை மழை தாங்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகிற போது நாம் இன்பம் கொள்வது ஏது
அடி பூகம்ப வேலையிலும் இரு வான்கோழி களவி கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு சுடும் தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாலும் தீவண்ணம் அணைவது தின்னம்

குளிருது குளிருது இருஉயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒருவிரல் நகருது மோட்ச வழி தேடி

கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை…

Movie: Taj Mahal
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman