Andru Peidha Mazhaiyil cover

Movie: Andru Peidha Mazhaiyil (1989)
Music: Thayanban
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ என் சோலையே இசையானது இளந்தென்றலே ஸ்ருதியானது இதயம் போடாதோ தகதிமிதா

பெண்: குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ

பெண்: மலர்கள் முழுதும் புதுக்கவிதை வண்டுகள் வாசிக்கும் மதுக்கவிதை பனியின் துளிக்குள் குடியிருக்க பாவை ஏங்கினேன் முடியவில்லை

பெண்: தனியாக நான் இடம் பார்க்கிறேன் தளிரோடு நான் முகம் பார்க்கிறேன் மலர் கேட்கிறேன் ரோஜாவாய் நானே மலர்ந்தேன்

பெண்: குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ

பெண்: இதுதான் இதுதான் எனதுலகம் என் மனம் தேடிடும் கனவுலகம் கிளையில் கிளியின் கவியரங்கம் கீதம் ஓடையின் ஜலதரங்கம்

பெண்: மழை வேளையில் மயிலாகினேன் மகராணி நான் முயலாகினேன் இசை பாடுறேன் என் பாட்டில் நானே கரைந்தேன்

பெண்: குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ என் சோலையே இசையானது இளந்தென்றலே ஸ்ருதியானது இதயம் போடாதோ தகதிமிதா.

பெண்: குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ குக்கூ குக்கூ குயிலின் குக்கூ குக்கூ