Chinna Pasanga Naanga cover

Movie: Chinna Pasanga Naanga (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒன்னே ஒன்ன எதிர்பார்த்து ஓடி வந்த மாமனுக்கு. ஒன்னும் கெட்டு ரெண்டும் கெட்டு மூணு நாலு அஞ்சும் கெட்டு அட ஆறும் கெட்டு ஏழும் கெட்டு எட்டும் கெட்டு ஒன்பதா கெடச்சுதப்பா டுர்ர்ர்…

ஆண்: கோவணத்த இறுக்கிக் கட்டு மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம் பூ மணத்த நெனச்சுகிட்டு வந்த குட்டுகள போட்டு உடைப்போம்

குழு: பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா செண்டுகள பூசி சுத்தி வரலாமா எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு

ஆண்: கோவணத்த… கோவணத்த இறுக்கிக் கட்டு மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம் பூ மணத்த நெனச்சுகிட்டு வந்த குட்டுகள போட்டு உடைப்போம்

குழு: ………..

ஆண்: எந்த பொண்ணும் எதுக்க வந்தா கன்னி வெக்க பாக்குறியே மன்மதன் போல் நெனச்சு நீதான் காலரத்தான் தூக்குறியே

ஆண்: சின்னஞ்சிறுசா பாத்துப் பாத்து ஜொள்ளு விட்டு அலையிறியே பூவு வெடிச்ச சேதி தெரிஞ்சா டாவடிக்கக் கெளம்புறியே

ஆண்: பொல்லாது மச்சான் இந்த நெனப்பு செல்லாது இங்கே உங்க கொழுப்பு சுட்டாக்கா தெரியும் சட்டி நெருப்பு பட்டாத்தான் புரியும் உங்க பொழப்பு

ஆண்: இப்போதே ரூட்ட நீ

குழு: மாத்தணும் மாத்தணும் மாத்திடணும்

ஆண்: இல்லாட்டி வீம்புல

குழு: மாட்டிட மாட்டிட மாட்டிடணும்

ஆண்: ஹா இத்தோடு போதுமா இன்னும் வேணுமா அய்யய்யா அய்யய்யா யய்யாயயய்யா

ஆண்: கோவணத்த.. கோவணத்த இறுக்கிக் கட்டு மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம் பூ மணத்த நெனச்சுகிட்டு வந்த குட்டுகள போட்டு உடைப்போம்

ஆண்: சின்னப் பசங்க நாங்களெல்லாம் சீர்திருத்தக்காரங்கதான் மன்றம் வச்சு ஊரக் காக்க வந்திருக்கும் சூரங்கதான்

ஆண்: ஒன்னப் போல மைனராலே ஊரு கெட்டுப் போகுமப்பா கண்ணகி போல் இருக்கும் பெண்ணும் மாதவியா ஆகுமப்பா

ஆண்: உன்னாட்டம் ஆள கண்டு புடிப்போம் உக்காத்தி வெச்சு பெண்டு எடுப்போம் வண்டாட்டம் நீயும் வட்டமடிச்சு கொண்டாட்டம் போட்டா கால ஒடிப்போம்

ஆண்: வாலாட்ட எண்ணினா

குழு: வெட்டுவோம் வெட்டுவோம் வெட்டிடுவோம்

ஆண்: சேட்டைகள் பண்ணினா

குழு: குட்டுவோம் குட்டுவோம் குட்டிடுவோம்

ஆண்: ஹா மச்சான் உன் மானம்தான் கப்பல் ஏறிடும் அய்யய்யா அய்யய்யா அய்யய்யா யயய்யா

ஆண்: கோவணத்த.. ஹா..கோவணத்த இறுக்கிக் கட்டு மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம் பூ மணத்த நெனச்சுகிட்டு வந்த குட்டுகள போட்டு உடைப்போம்

குழு: பொண்டுகள பாத்தா புத்தி கெடலாமா செண்டுகள பூசி சுத்தி வரலாமா எங்களுக்கு தேவ டண்டனக்கு டண்டனக்கு

ஆண்: கோவணத்த..ஆஹா ஆஹாஹா கோவணத்த இறுக்கிக் கட்டு மச்சான் கூட நின்னு பாட்டு படிப்போம் பூ மணத்த நெனச்சுகிட்டு வந்த குட்டுகள போட்டு உடைப்போம் ஆ அஹா ஆஹா ஹா