Movie: Bharathi Kannamma (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Mano
Added Date: Feb 11, 2022
ஆண்: கொட்டுங்கடா..ஆ..
ஆண்: மேள தாளம் தட்டுங்கடா…
ஆண்: அய்யா நம் தேவர் ஐயா அரசாண்ட வம்சம் அய்யா தேவர்தான் பெத்து வச்ச பொண்ணு அது தெய்வம் அய்யா
ஆண்: மங்கள மங்கைகள் மாலைய சூடுங்க கொமரி பொண்ணுங்க கொலவை போடுங்க தங்கத்த எடுத்து அத தறி போட்டு எளச்சு எங்க பொண்ணுக்கு உடுத்து ஒரு தேர் போல சிங்காரிச்சு…
ஆண்: ஹான்..கொட்டுங்கடா.. மேள தாளம் தட்டுங்கடா ஹேய் கொட்டுங்கடா.. மேள தாளம் தட்டுங்கடா
குழு: ……….
ஆண்: சூரியன ராத்திரிக்கு விழிக்க சொன்னவரு தேவரு சந்திரன முப்பது நாள் இருக்க சொன்னவரு தேவரு
ஆண்: இடது கையால் சிறுதையத்தான் இடறி விட்டவரு தேவரு ஆயிரம் பேர் உலை கொதிக்க அரிசி தந்தவர் தேவரு
ஆண்: தண்ணி கேட்டு தவிச்சு வந்தா மோரு தந்தது தேவரு… தாலி மஞ்ச கயித்துகெல்லாம் தங்கம் தந்தது தேவரு..
ஆண்: அய்யா…பெத்து வச்ச பொண்ணு கண்ணு தேவர்குல கண்ணு… ஹேய் சமைஞ்ச பொண்ணுக்கு சந்தனம் கண்ணுக்கு நெருக்கி தொடுத்த மருத மல்லிகை இறுக்கி பின்னுங்க இறுக்கி பின்னுங்க
ஆண்: கொட்டுங்கடா..ஆ… மேளதாளம் தட்டுங்கடா ஹான் கொட்டுங்கடா..ஆ… மேளதாளம் தட்டுங்கடா
குழு: ………….
ஆண்: பூவுக்கெல்லாம் அதிசயமா பூத்து வந்த கண்ணம்மா பொம்பளையே ஆச படும் பொன்னழகு பெண்ணம்மா
ஆண்: கண்ணழக பாத்துபுட்ட கெண்ட மீனு வாலுமா இவ கட்டழக பாடி வைக்க கம்பன் தமிழ் போதுமா கெட்டியில்ல தாட்டியில்ல ஒட்டியாணம் ஒட்டுமா எடைக்கு எடை தங்கம் வேணும் இந்த சீரு பத்துமா
ஆண்: வாழ்க..தேவர் மகள் வாழ்க வாழ்க..தேவர் குலம் வாழ்க
ஆண்: ஹேய் வாடுற சிங்கம் வாழ்த்து சொல்லுங்க சமைஞ்ச பொண்ணுக்கு சந்தனம் பூசுங்க அந்திக்கு முன்னால பந்திக்கு முந்துங்க
ஆண்: அய்யா
குழு: நம் தேவர் அய்யா
ஆண்: அரசாண்ட
குழு: வம்சம் அய்யா
ஆண்: தேவர்தான்
குழு: ஹா பெத்து வச்ச
ஆண்: பொண்ணு
குழு: அது தெய்வம் அய்யா
குழு: மங்கள மங்கைகள் மாலைய சூடுங்க குமரி பொண்ணுங்க கொலவை போடுங்க
ஆண்: தங்கத்த எடுத்து அத தறி போட்டு எளச்சு எங்க பொண்ணுக்கு உடுத்து ஒரு தேர் போல சிங்காரிச்சு..
ஆண்: கொட்டுங்கடா..ஆ… மேளதாளம் தட்டுங்கடா ஆ..கொட்டுங்கடா..ஆ… மேளதாளம் தட்டுங்கடா
குழு: ……….